உலகின் சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் இவர்தான் – மைக்கேல் வாகன் பாராட்டு

0
1604
Michael Vaughan

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் முப்பதாவது ஆட்டத்தில், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதிய போட்டி, ஒரு ஹை-ஸ்கோரிங் லாஸ்ட் ஓவர் திரில்லராக நடந்து முடிந்துள்ளது.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஷ் பந்துவீச்சை தேர்வுசெய்ய, ராஜஸ்தானுக்காக பேட்டிங்கில் ஓபன் செய்ய வந்த ஜோஸ் பட்லர் சூறாவளிபோல் சுழன்றடித்து, இந்தத் தொடரின் தன் இரண்டாவது சதத்தை அடித்து, கொல்கத்தா பவுலர்களை நிலைகுலைய வைத்துவிட்டார். இவரது இந்தச் சிறப்பான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி இருபது ஓவர்கள் முடிவில் 217 ரன்களை குவித்தது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் பட்லர் மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். குறிப்பாக ட்வென்ட் ட்வென்டி போட்டிகளில். கடந்த முறை யு.ஏ.இ-ல் நடந்து முடிந்த இருபது ஓவர் உலகக்கோப்பையில், இலங்கை உடனான போட்டியில், ஷார்ஜாவின் மெதுவான ஆடுகளத்தில் நின்று சதமடித்தது, அவரின் இன்னிங்ஸ்களில் மிகச்சிறந்த ஒன்றாய் இருக்கும். சமீபக் காலத்தில் மட்டுமே இருபது ஓவர் போட்டிகளில் அவரிடமிருந்து மூன்று சதங்கள் வந்துள்ளன!

நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான அவரது சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, இங்கிலாந்து முன்னாள் கேப்டன், ட்வீட்டர் புகஷ் மைக்கேல் வாகன் பட்லரை “உலகின் சிறந்த ட்வென்ட்டி ட்வென்ட்டி வீரர்” என்று புகழ்ந்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ் கேப் பட்லர் வசம்தான் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது!