இங்கிலாந்து உலக கோப்பையை ஜெயிக்காது.. 2019 அந்த பார்முலா வேணும் – மைக்கேல் வாகன் விமர்சனம்

0
144
Vaughan

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது உலகக் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட இங்கிலாந்து முதல் சுற்று உடன் வெளியேறியது. தற்போது டி20 உலக கோப்பையிலும் அதே நிலையில் இருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டி மழையால் டிரா ஆனது. சிறிய அணிக்கு எதிராக போட்டி டிரா ஆனது தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் ஸ்காட்லாந்து அணி சிறப்பாக வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு டிராவுடன் ஐந்து புள்ளிகள் பெற்று இருக்கிறது. மேலும் ரன் ரேட் மிக அதிகமாகவும் இருக்கிறது. ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் கூட, இங்கிலாந்து பெரிய ரன் ரேட்டில் அடுத்த இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “இங்கிலாந்து தற்போது இந்த குழப்பத்தில் இருப்பது குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து நீண்ட காலமாக வலிமையாக இருந்தது. தற்போது சரிவை சந்திக்கிறது. அவர்கள் அணி தேர்விலும் திட்டத்திலும் ஒரே மாதிரியான தவறை மீண்டும் செய்கிறார்கள்.அவர்களின் செட்டப் நன்றாக இருந்த போதிலும் கூட உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று தோன்றவில்லை.

2019 ஆம் ஆண்டு இயான் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடியது. வீரர்களுக்கு அவர்களுடைய இடம் என்ன என்பது தெளிவாக தெரிந்தது. தற்போது ஜோஸ் பட்லர் தலைமையிலான அணிக்கு அப்படி எதுவும் இல்லை. தற்போது இருக்கும் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணி டி20 உலகக் கோப்பைக்கு பிறகு மாற்றத்தை சந்திக்கும். மேலும் இங்கிலாந்து அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ப்ளீஸ் பாகிஸ்தான் இந்தியாவ பாருங்க.. இந்த 2 விஷயத்தை அவங்ககிட்ட கத்துக்கோங்க – அகமத் சேஷாத் அறிவுரை

ஜோஸ் பட்லர் தலைமையில் கடந்த முறை நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி இருந்தது. ஆனால் தற்பொழுது சூழ்நிலைக்கு ஏற்றபடி அணி தேர்வு நடக்காதது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.