ப்ளீஸ் பாகிஸ்தான் இந்தியாவ பாருங்க.. இந்த 2 விஷயத்தை அவங்ககிட்ட கத்துக்கோங்க – அகமத் சேஷாத் அறிவுரை

0
283
Shehzad

இன்று டி20 உலக கோப்பை தொடரில் ஏ பிரிவில் பாகிஸ்தான் அணி கனடா அணிக்கு எதிரான போட்டியில் நியூயார்க் நாசாவ் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தோற்றால் நேரடியாக டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணியை பார்த்து இரண்டு விஷயங்களில் பாகிஸ்தானை கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமத் சேஷாத் கூறியிருக்கிறார்.

தற்போது பாகிஸ்தான் அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு என்பது அந்த அணி இன்று கனடா அணிக்கு எதிராகவும் அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிராகவும் வெற்றி பெற வேண்டும். அதே சமயத்தில் அமெரிக்க அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும்.

- Advertisement -

இந்த கணக்குகள் சரியாக நடக்கும் போது தான் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். பாகிஸ்தான அணி இரண்டு அணிகளை வெல்வது முக்கியமான விஷயமாக இருக்கிறது. இரண்டு சிறிய அணிகளை எதிர்கொண்டாலுமே அந்த அணி சிறிய அணிகளை வெல்வதற்கு மிகவும் கடினப்படுகிறது.

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் இருந்து ஜிம்பாப்வே போன்ற அணிக்கு எதிராகவும் பெரிய பிரச்சனைகள் டி20 கிரிக்கெட்டில் இருந்து வந்திருக்கிறது. எனவே பாகிஸ்தான் அணி கனடா மற்றும் அயர்லாந்து அணியை தோற்கடிக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் அகமத் சேஷாத் கூறும் பொழுது ” பாகிஸ்தான் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும். மேலும் எதிரணிகளை எப்படி களத்தில் நடத்த வேண்டும், சிறிய அணிகளுக்கு எதிராக எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை இந்திய அணியை பார்த்து பாகிஸ்தான் அணி கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதை பற்றி நினைக்காதீர்கள். அது உங்கள் கைகளில் கிடையாது. நீங்கள் குவாலிட்டியாகவும் இண்டெண்டோடும் விளையாடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஸ்வான் பாபரை தூக்குவேன்.. பாகிஸ்தானுக்காக ஆடி.. இப்ப கனடாவுக்கு ஆடும் வீரர் சவால்

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு மிக பெரிய போட்டியாக அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அமைந்திருக்கிறது. அந்தப் போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றால் நேரடியாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.