இந்திய அணி ஆஸ்திரேலியாலில் முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்கு செய்துள்ள திட்டங்கள் குறித்து தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இந்திய அணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் இந்த தயாரிப்புகளில் மைக்கேல் வாகன் அதிருப்தி அடைந்திருக்கிறார்.
பிசிசிஐயின் இரண்டு அறிவிப்புகள்
இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு விமானம் ஏறுவதற்கு முன்பாகவே பிசிசிஐ இந்திய அணி ஆஸ்திரேலிய இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியில் விளையாடாது என அறிவித்தது. பின்பு இந்திய அணி ஆஸ்திரேலிய வந்ததும் இந்திய ஏ அணிக்கு எதிரான இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடும் என்று அறிவித்தது.
அதே சமயத்தில் பிசிசிஐ இந்திய அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடாது என்று கூறிவிட்டது. அதற்கு பதிலாக சிமுலேஷன், விசுவலேசன் மற்றும் இன்ட்ரா ஸ்குவாட் என மூன்று விதமான பயிற்சிகளில் இந்திய அணி ஈடுபடும் என்று தெரிவித்திருந்தது. தற்பொழுது இந்த வகையில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்திய அணி நிர்வாகம் செய்வது புரியவில்லை
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் மைக்கேல் வாகன் கூறும்பொழுது “ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டியை தவிர்த்து விட்டு இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியை மட்டுமே விரும்பும் இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது முதல் டெஸ்ட் நடக்க இருக்கும் பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். இங்கு இந்திய அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாடியிருந்தால் இங்கு இருக்கும் பவுன்ஸ்க்கு அவர்களால் பழகிக் கொள்ள முடியும். நல்ல வாய்ப்பை அவர்கள் தவற விட்டு விட்டார்கள்”
இதையும் படிங்க: ஆஸி டெஸ்ட் தொடரில் புஜாரா.. வித்தியாசமான முறையில் பங்கேற்பு.. வெளியான அதிகாரப்பூர்வ செய்தி
“அப்போது உள்ள இளம்வீரர்கள் எங்களுடைய மனநிலையில் இருந்து வேறு விதத்தில் இருக்கிறார்கள். எங்களைப் போல் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து வருடத்தின் எல்லா மாதங்களிலும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதனால் தங்களால் எந்த ஒரு இடத்திலும் உடனடியாக மாற்றி அமைத்துக் கொண்டு தயாராக விட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் இப்படி அவர்களால் தயாராக முடிகிறதா? என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






