பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களைத் தொடர்ச்சியாக குவித்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் ஜோ ரூட் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
மீண்டும் பார்முக்கு திரும்பிய ஜோ ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பஸ்பால் ஆட்ட முறையை கையில் எடுத்த பிறகு நிதானமாக விளையாடும் முறையை முற்றிலுமாக கைவிட்டது. இங்கிலாந்து அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆக்ரோஷமாக விளையாடும் பாணியை பின்பற்றி வந்தனர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மனாக கருதப்படும் ஜோர் ரூட்டும் அதே பாணியில் பின்பற்றி ரன்கள் குவிக்க முடியாமல் விரைவிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இந்த நிலையில் தனது ஆட்ட முறையை முற்றிலுமாக மாற்றி சிறப்பாக பேட்டிங் செய்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 176 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் ஆட்டமிழக்காமல் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஜோ ரூட்டை கட்டுப்படுத்த இந்தியாவின் பும்ராவால் மட்டுமே முடியும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
பும்ராவால் மட்டுமே முடியும்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஜோ ரூட்டை எதிர்த்துப் போராடக் கூடிய பந்துவீச்சாளராக தற்போது இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே திகழ்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்த கோடை காலத்தில் பும்ராவை எப்படி நிர்வகிப்பது என்று யோசித்து அதற்கான வேலையில் ஈடுபடுவார் என்று தோன்றுகிறது. ஆனால் தற்போது அவர் எப்போது தவறு செய்வார் என்று பந்துவீச்சாளர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:217 ஸ்ட்ரைக் ரேட்.. 74 ரன்ஸ்.. ஜெய்ஸ்வாலை முந்தி.. ரோகித் சர்மா பட்டியலில் இணைந்த நிதிஷ் குமார் ரெட்டி.. தனித்துவ சாதனை
ஆஸ்திரேலியாவில் அவர் அடிக்காத சதம் உட்பட அவர் செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் நான் பார்த்தவரை ஆஸ்திரேலியாவில் அவர் பேட்டிங் செய்தவரை பெரிய தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் முறியடிக்காத சதம் மட்டுமே பாக்கி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்த கோடை காலத்தில் அவர் மூன்று சதங்கள் அடித்து இருப்பதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 12000 ரன்கள் குவித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்று இருக்கிறார்.






