ரூட்டால சமாளிக்க முடியாத ஒரே ஆள் பும்ராதான்.. ஆனா இப்பவே அவர் அந்த வேலையை ஆரம்பிச்சிருப்பார் – மைக்கேல் வாகன் கருத்து

0
97
Bumrah

இங்கிலாந்து அணி நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தடுமாறும் ஒரே பவுலராக இந்தியாவின் பும்ரா மட்டுமே இருக்கிறார் என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கைந்து ஆண்டுகளாக ஜோ ரூட்டின் ஆட்சி நடந்து வருகிறது என்று கூறலாம். இந்த காலகட்டத்தில் அவர் மொத்தம் 18 சர்வதேச டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது. சச்சினின் டெஸ்ட் சாதனைகளை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகிறார்.

- Advertisement -

உடைந்த அலைஸ்டர் குக் மெகா சாதனை

இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் தனது 35 வது சர்வதேச டெஸ்ட் சதத்தை அடித்தார். மேலும் இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு அதிக ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்திருந்த அலைஸ்டர் குக் சாதனையையும் முறியடித்தார்.

மேலும் தற்பொழுது 150 ரன்கள் தாண்டி விளையாடிக் கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்து ஜோ ரூட் தற்போது வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் மற்றும் 18 சதங்கள் அடித்து நொறுக்கி இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டங்களில் மொத்தம் 5 ஆயிரம் ரன்களை நிறைவு செய்திருக்கிறார். அவருடைய இந்தச் சாதனைகளுக்கு அருகில் கூட வேறு எந்த வீரர்களும் கிடையாது.

- Advertisement -

பும்ரா மட்டுமே பிரச்சனையா இருக்கிறார்

இந்த நிலையில் ஜோ ரூட் குறித்து மைக்கேல் வாகன் பேசும்பொழுது “ஜோ ரூட்டின் வரிசையில் இல்லாத ஒரே பந்துவீச்சாளராக பும்ரா மட்டுமே இருக்கிறார். அடுத்த சம்மரில் இங்கிலாந்துக்கு வரும் இந்திய அணியில் பும்ராவை எப்படி சமாளிப்பது என தற்போது ஜோ ரூட் சிந்திக்க ஆரம்பித்து இருப்பார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஜோ ரூட் தவறு செய்வதற்காக காத்திருக்கிறார்கள். அவர் ஆஸ்திரேலியாவில் இன்னும் சதம் அடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது”

இதையும் படிங்க : ஐசிசி டி20 ரேங்கிங்.. மாஸ் பண்ணிய ஹர்திக் பாண்டியா அர்ஷ்தீப் சிங்.. ருதுராஜுக்கு நடந்த சோகம்.. புதிய அப்டேட்

“ஜோ ரூட்டை விட கிரிக்கெட்டின் வெவ்வேறு வடிவங்களை மிகச் சிறப்பாக விளையாடியவர்கள் வேறு யாரும் கிடையாது. அவர் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பும் வரை விளையாடினால் சச்சின் சாதனையை அவர் நிச்சயம் முறியடித்து விடுவார். அவர் ஒரு சிறந்த வீரராக இருப்பதைவிட அதை புன்னகையுடன் செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் குழந்தைகள் பின்பற்றுவதற்கான சிறந்த முன்மாதிரி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -