இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒரு பந்துவீச்சாளராக ஒரு முக்கியமான மாற்றத்துடன் சிறப்பாக திரும்பி வருவார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுவதும், இப்படியான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இதுவரையில் தோல்வி அடைந்ததில்லை என்பதும் தற்பொழுது சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியின் தெளிவான தடுமாற்றம்
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மற்றும் உஸ்மான் கவாஜா இருவர் மட்டுமே குறிப்பிடும்படி செயல்பட்டிருந்தார்கள். மற்ற வீரர்கள் யாரும் சிவப்பு பந்து வடிவத்தில் சில மாதங்களாக விளையாடவில்லை. மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக இல்லை.
இதை இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா வீரர்களிடம் தெளிவாக உணர முடிந்தது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களும் தடுமாற்றத்தில் இருந்தார்கள். குறிப்பாக கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் பழைய அதிரடியை பார்க்க முடியவில்லை.
இந்த முறை கம்மின்ஸ் திரும்பி வருவார்
இது குறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் சிறந்த கேப்டன் மட்டும் இல்லாமல் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் வேகத்தில் மிகவும் குறைவானவராகவே இருந்தார். ஏனென்றால் அவர் கடைசியாக சிவப்புக் கொண்டு வடிவத்தில் கிரிக்கெட் மார்ச் மாதத்தில் விளையாடு இருந்தார். இந்த வடிவத்தில் இருந்து அவர் வெளியே நீண்ட காலமாக இருந்து வந்தார்”
இதையும் படிங்க: ஆஸி 2வது டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றம்.. அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
“எனவே அவர் முதல் டெஸ்டில் இருந்ததைவிட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகத்தில் முன்னேறுவார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் தனது உடலுக்கு சில ஓவர்கள் முதல் டெஸ்டில் கொடுத்திருக்கிறார். மனரீதியாகவும் இந்த வடிவத்திற்கு தயாராக அதற்கு முதல் டெஸ்ட் உதவி இருக்கும். எனவே அவர் இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக வருவார். அவர் தனது வேகத்தை 135 கிலோ மீட்டருக்கு கீழ் குறைத்தால், பேட்ஸ்மேன்களுக்கு விளையாடுவதற்கு நேரம் கிடைக்கும் ஆனால் அவருடைய துல்லியம் அதிகமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






