வாசிம் அக்ரம் கிடையாது.. பும்ராதான் உலகத்துல அதுக்கு பெஸ்ட்.. நான் ஒத்துக்குறேன் – மைக்கேல் வாகன் கணிப்பு

0
3581
Bumrah

நடந்து முடிந்த ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா வென்றார். உலகின் மிகச்சிறந்த வெள்ளைப்பந்து வேகப் பந்துவீச்சாளர் பும்ராதான் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ரா மொத்தம் 15 விக்கெட் கைப்பற்றிய இருந்தார். இதில் மிக முக்கியமான விஷயம் அவர் ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். மேலும் ஆவரேஜாக அவர் எட்டு பந்துகளுக்கு ஒரு முறை விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இந்திய அணி நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் எப்பொழுதெல்லாம் சிக்கலில் இருந்ததோ அப்பொழுதெல்லாம் பும்ரா பந்துவீச்சு நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றியை கொண்டு வந்ததில் அவருடைய பங்கு மிகப் பெரியது.

இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு பும்ராவின் பங்களிப்பு குறித்தான பாராட்டுக்கள் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அளவில் பெருகி இருக்கிறது. முன்பு அவரை வாசிம் அக்ரம் உடன் ஒப்பிட்டு வந்தார்கள். தற்பொழுது வாசிம் அக்ரமை விட பும்ரா சிறந்தவர் என மைக்கேல் வாகனே கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “ரீசா ஹென்றிக்ஸ்க்கு வீசப்பட்ட பந்து மிகச் சிறந்த பந்து. அந்தப் பந்து லெக் ஸ்டெம்பிள் கோணலாக வீசப்பட்டது. ஆனால் அது வந்து ஆப் ஸ்டெம்பை தாக்கியது. பின்பு மார்க்கோ யான்சனுக்கும் அப்படியான ஒரு கோணலான பந்து. இந்தமுறை இது உள்ளே வந்தது. அவர் பந்துவீச்சின் போது எல்லா பேட்ஸ்மேன்களையும் பாலோ செய்கிறார். இதன் காரணமாக சில வைடான மெதுவான பந்துகளை வீசுகிறார். பும்ரா ஒரு பெரிய பந்துவீச்சு மேதை.அவர்தான் மிகச்சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் பந்துவீச்சாளர் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : நான் நிச்சயம் அதையெல்லாம் சொல்ல போறேன்.. இந்த ஒரே ஒரு போட்டோ போதும் – ரோகித் சர்மா பேட்டி

நீங்கள் எனக்கு வாசிம் அக்ரமை சொல்வீர்கள் என்று தெரியும். அவர் சிறப்பு வாய்ந்தவர் என்பதை நானும் அறிவேன். ஆனால் பும்ரா அதிரடியான திறன்களை பெற்றிருக்கிறார். மேலும் அவரிடம் நல்ல வேகமும் இருக்கிறது. அவர் எல்லாத் திறமைகளையும் வைத்திருக்கிறார். இது இந்த உலகக் கோப்பையில் ஒன்று இரண்டு போட்டிகளில் மட்டும் இல்லை, எல்லாப் போட்டிகளிலும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -