நடைபெற்று முடிந்த ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கைப்பற்றியது. தற்பொழுது இந்திய அணி இன்னும் நாடு திரும்பாமல் பார்படாசில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா சில விஷயங்கள் குறித்து தான் பேச விருப்பதாக தெரிவித்திருக்கிறார்
2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு ரோஹித் சர்மா கொண்டுவரப்பட்டார். அவருடன் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த ஜோடிக்கு ஆரம்பத்தில் நிறைய அதிர்ஷ்டங்கள் அமையவில்லை.
2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியா அணியிடம் எனத் தொடர்ந்து முக்கிய போட்டிகளில் இந்த ஜோடி தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக இந்தியாவில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் பொறுப்பின் கீழான இந்திய அணி மீது நிறைய விமர்சனங்கள் ஐசிசி தொடர்களில் இருந்து வந்தது. மேலும் இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்றி 13 ஆண்டுகள் ஆகியிருந்தது. இப்படியான நிலையில் உலகக் கோப்பையை கைப்பற்றி இருப்பது மிகப்பெரிய ஆசுவாசமாக இருப்பதாக ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் பொழுது “நான் தரையில் படுத்து இருப்பது போலான படம் நான் தற்பொழுது எப்படி உணர்கிறேன் என்பதை உணர்த்தும் படமாக இருக்கிறது. பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. நேற்று எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஆனால் நான் நிச்சயம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வேன். ஆனால் நான் இப்பொழுது பெரிய கனவில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். அது ஒரு பில்லியன் ரசிகர்களின் நனவாகும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸில் மோசமான சூழ்நிலையில் சிக்கிய இந்திய அணி.. தனி விமானம் அனுப்ப ஜெய் ஷா திட்டம்.. என்ன நடக்கிறது?
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவருமே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்த இரண்டு வீரர்களும் பங்கேற்பது உறுதி என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தி இருக்கிறார்.






