“டெஸ்ட் கிரிக்கெட் வாழனுமா?.. அப்ப இத பண்ணிட்டு போங்க” – மாஸ் ஐடியா கொடுத்த மைக்கேல் வாகன்

0
65
Vaughan

ஐபிஎல் தொடரின் வெற்றி உலகெங்கும் இருக்கும் பல கிரிக்கெட் நாடுகளின் வாரியங்களை பிரான்சி சைஸ் டி20 லீக்குகளை தங்களது நாட்டில் நடத்த வைத்திருக்கிறது.

தற்பொழுது இந்தியா தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் நடத்தும் பிரான்சிஸைஸ் டி20 லீக்குகள் பெரிய அளவில் வெற்றிகரமாக செல்கின்றன. இன்னொரு பக்கத்தில் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் டி20 லீக்கும் வெற்றிகரமாகவே இருக்கிறது. இந்த லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஒரு அணியை வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கிரிக்கெட்டுக்குள் வந்த அமெரிக்கா உடனுக்குடன் ஒரு டி20 லீக்கை சொந்தமாக நடத்தி முடித்து விட்டது. இதில் ஆறு அணிகளில் நான்கு அணிகளை ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

இந்தக் குறிப்பிட்ட தொடர்களில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வந்து விளையாடுகிறார்கள். இந்த தொடர்களில் விளையாடுவதற்கு தங்களது தேசிய அணிக்கு விளையாடாமல் கூட வருகின்ற வீரர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.

இப்படி பிரான்சிசைஸ் டி20 லீக்குகளின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் உருவாவதால், சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா வடிவங்களை காப்பாற்றுவதுமே கடினமாக இருக்கிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தை காப்பாற்றுவது இந்த காலக்கட்டத்தில் கடினமாக இருக்கிறது. உருவாகி வரும் வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் அளவுக்கு இல்லை என்பதும் இன்னொரு கவலை.

- Advertisement -

இதற்கென ஐசிசி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்துவதும், எல்லா டெஸ்ட் நாடுகளும் முடிவு தெரிகின்ற வகையில் ஆடுகளங்களை அமைப்பதும், டெஸ்ட் கிரிக்கெட்டை ஓரளவுக்கு சுவாரசியப்படுத்தி இருக்கிறது. ஆனால் நிரந்தரமாக டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற புதிதாக ஏதாவது செய்ய வேண்டும்.

இதுகுறித்து ஒரு புதிய யோசனையை முன் வைத்துள்ள மைக்கேல் வாகன் கூறும் பொழுது “ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு, ஒரு ஆண்டில் நிரந்தரமாக மூன்று மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடுவதற்கு ஒதுக்குவது மட்டும்தான், இந்த சிறந்த கிரிக்கெட் வடிவத்தை காப்பாற்றுவதற்கான சிறந்த வழி. மீதமுள்ள மாதங்களில் மற்ற எல்லா கிரிக்கெட் வடிவங்கள் மற்றும் பிரான்சிசைஸ் டி20 லீக்குகளை விளையாடிக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.