தற்போது ரிக்கி பாண்டிங் விராட் கோலி பற்றி பேசியதற்கு கம்பீர் தெரிவித்து இருந்த கருத்துக்கு மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் இந்த விஷயம் தற்பொழுது பெரிய சர்ச்சையாக கிரிக்கெட் உலகில் மாறிக் கொண்டிருக்கிறது.
ரிக்கி பாண்டிங் விராட் கோலி பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலையாக இருப்பது குறித்து பேசி இருந்தார். இதுகுறித்து விமர்சனம் செய்த கம்பீர் ரிக்கி பாண்டிங் அவருடைய ஆஸ்திரேலியா கிரிக்கெட் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று சொல்லி இருந்தார். தற்போது இதுதான் உலகக் கிரிக்கெட்டில் சர்ச்சையாக மாறிவிட்டிருக்கிறது.
இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “இந்திய பயிற்சியாளராக கம்பீர் இருப்பது எனக்கு பிடித்த விஷயம். ஏனென்றால் அவர் எப்பொழுதும் சூடாக காரமாக பேசக் கூடியவர். எனவே அவர் ஊடகங்களில் தொடர்ந்து பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்”
“இப்படி எல்லாம் இருந்தாலும் கூட ரிக்கி பாண்டிங் பற்றி கம்பீர் பேசிய விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. கம்பீர் ஒரு சுவாரசியமான கேரக்டர். அவர் மிகவும் காரமான கருத்துக்களை தெரிவிப்பார் என்பதால் எனக்கு அவரை பிடிக்கவும் செய்யும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வீரர் மற்றும் ஒரு குறிப்பிட்ட அணி பற்றி முன்னாள் வீரர் ஒருவர் பேசுவதை நீங்கள் தடுக்க முடியாது”
மேலும் பேசிய மைக்கேல் வாகன் கூறும் பொழுது “ஹைடன் இந்தியாவில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறார். எனது இந்திய அணி மற்றும் வீரர்களை பற்றி பேசுவதற்கான விபரங்கள் அவரிடம் இருக்கிறது. எனவே அவர் கருத்து தெரிவிக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியின் செயல் திறன் குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்போம். கம்பீர் சொல்கின்ற தர்க்கப்படி பார்த்தால் நான் ஆஸ்திரேலியாவில் உட்கார்ந்து கொண்டு பேசவே முடியாது இங்கிலாந்துக்குதான் போக வேண்டும்”
இதையும் படிங்க : கேஎல் ராகுல் குடும்பம் நண்பர்கள் ஐபிஎல் ஏலத்தை விட்டு வெளியில் வரணும்.. இத மட்டும் செய்யணும் – கங்குலி பேச்சு
“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விஷயங்கள் பயிற்சியாளர் கம்பீருக்கு எளிதான ஒன்றாக இருக்காது. இந்தியா ஒரு ஆட்டத்தில் தோற்கும் பொழுது கம்பீர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்று பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார். தற்போது முன்னாள் வீரர்கள் எந்த அணியையும், எந்த வீரரையும் விமர்சனம் செய்யக்கூடாதா? கருத்து தெரிவிக்க கூடாதா? என கம்பீருக்கு எதிராக விமர்சனங்கள் உலக அளவில் கிளம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.