என்ன நியாயம் இது.. ஏலத்துக்கு வர்றீங்க.. அப்புறம் பாதியில போனா பிசிசிஐ ஏத்துக்குமா?. இங்கி வீரரை விமர்சிக்கும் வாகன்

0
175

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இங்கிலாந்து அணியை சேர்ந்த ஹாரி புரூக் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதித்தது.

இந்த சூழ்நிலையில் அவர் தடை விதிக்கப்பட்டது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

டெல்லி வீரர் விலகல்

இங்கிலாந்து அணியை சேர்ந்த மிடில் வரிசை அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் விலகுவதற்கான எந்த காரணத்தையும் ஹாரி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் ஏலத்திற்கு முன்னதாகவே ஒரு வீரர் எந்தவிதமான காரணத்தையும் அறிவிக்காமல் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால் அவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தெரிந்தும் ஹாரி ப்ரூக் விலகி இருக்கும் நிலையில் அவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் விளையாடுவதற்கான தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் மைக்கேல் வாகன் பிசிசியின் விதிக்கு தனது ஆதரவினை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ செய்வது சரிதான்

இது குறித்து மைக்கேல் வாகன் கூறும்போது “பிசிசிஐ சொல்வது சரி என்று நினைக்கிறேன். உங்களை நீங்களே முன் நிறுத்திக் கொண்டீர்கள் என்று தான் தெரிகிறது. விதிகள் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் விதி என்பது விதி தான். இந்த விதியை அவர்கள் போன வருட ஐபிஎல் முடிவின்போதே அறிவித்துவிட்டார்கள். ஏலத்தில் கலந்து கொள்கிறீர்கள், சரி என்று சொல்கிறீர்கள் அதற்கு பின்னர் எந்த பலனும் இல்லாமல் வெளியே செல்கிறீர்கள்.

இதையும் படிங்க:புதிய ஐபிஎல் ரூல்.. ஒன்னு நல்லது இன்னொன்னு வேஸ்ட்.. வருண் சக்கரவர்த்தி ஷமிக்கு எதிரான கருத்து

அவருக்கு காயம் ஏற்படவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாட அங்கு செல்ல விருப்பமில்லை என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்கிறது. அவர் இங்கிலாந்திலேயே தங்க முடிவு எடுத்து விட்டார்” என்று மைக்கேல் வாகன் கூறுகிறார். ஹரி ப்ரூக் செய்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே அவர் இதுபோன்று ஒரு முறை ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில வீரர்கள் இப்படி செய்த காரணத்தினால் தான் பிசிசிஐ இந்த விதியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -