தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வித்தியாசமான அழுத்தத்தை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை வைத்து கொடுத்து வருவதாக செய்திகள் கூறுகிறது.
கிரிக்கெட் உலகத்தில் அடுத்து பெரிய தொடராக ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் 2027 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து எல்லா கிரிக்கெட் நாடுகளும் அதை நோக்கி கவனத்தை திருப்பி உள்ளன.
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
தற்போது இந்திய ஒருநாள் அடியில் மட்டுமே பிரபல நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடி வருகிறார்கள். இந்தியா தாண்டி இவர்களுக்கு உலகெங்கும் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களால் தனிப்பட்ட முறையில் மைதானத்திற்கு ரசிகர்களை இழுத்து வர முடிகிறது.
மேலும் இவர்களுடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் சிறப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவை விட தற்போது விராட் கோலி மிகவும் அதிரடியாக விளையாடுவதோடு சதங்களையும் தொடர்ந்து குவித்து வருகிறார். இதனால் ரசிகர்களுக்கு இவர்களின் பேட்டிங்கை பார்க்க பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வித்தியாச கோரிக்கை
அடுத்து இந்திய அணி இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தற்போது இந்த நான்கு நாடுகளுமே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே விளையாடுவதால், தங்களுடைய அட்டவணையில் கூடுதல் ஒரு நாள் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அழுத்தம் தந்து வருகின்றன.
இதையும் படிங்க : 19வது ஐபிஎல் தொடரில் என்னை பொறுத்தவரை.. இந்த இந்திய வீரர்தான் பெரிய அழுத்தத்தில் இருப்பார் – சிஎஸ்கே முன்னாள் வீரர்
இந்த சுற்றுப்பயணங்களில் இலங்கை அணிக்கு எதிராக வெள்ளைப் பந்து தொடர்கள் இல்லை. ஆனால் அவர்கள் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்பட வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். மற்ற மூன்று நாடுகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5 போட்டிகள் கொண்டதாக மாற்ற கேட்டிருக்கிறார்கள். மேலும் இதற்காக டி20 போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா? என்று தெரியவில்லை. தற்போது இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.






