“மெக்கலம் பொது அறிவ யூஸ் பண்ணுங்க.. இந்த வாரம் பயப்படுற மாதிரி அது நடக்க போகுது” – வாகன் அறிவுரை

0
3583
Vaughan

ஜோ ரூட் தலைமையில் 2022 ஆம் ஆண்டு வரையில், இங்கிலாந்து டெஸ்ட் அணி உள்நாடு மற்றும் வெளிநாடு என பல படுதோல்விகளை சந்தித்து வந்தது. கேப்டன்ஷிப்பில் அவரும் சில தவறுகளை செய்திருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு நியூசிலாந்தின் அதிரடி முன்னாள் ஆட்டக்காரர் மெக்கலத்தை பயிற்சியாளராக கொண்டு வந்து, அதிரடி ஆட்டக்காரர் பெண் ஸ்டோக்சை கேப்டனாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

- Advertisement -

இந்த ஜோடி இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு பேட்டிங் செய்ய சாதகமான தட்டையான ஆடுகளங்களை அமைத்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டியை எப்படி விளையாடுகிறார்களோ அப்படியே டெஸ்ட் கிரிக்கெட்டையும் விளையாட முடிவு செய்தார்கள்.

இவர்களின் இந்த அதிரடியான அணுகுமுறைக்கு பாஸ்பால் என்று மீடியாக்கள் பெயர் வைத்தன. அதே சமயத்தில் இந்த அணுகு முறையில் இங்கிலாந்து டெஸ்ட் அணி உள்நாட்டிலும் ஆசியாவில் பாகிஸ்தானிலும் பெரிய வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

மேலும் இவர்கள் இந்த அணுகு முறையால் சில போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக தொடரை எங்கும் இழந்தது கிடையாது. இதன் காரணமாக அவர்களின் இந்த அணுகுமுறை குறித்து அவர்கள் மிக நம்பிக்கையாக இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்று பாஸ்பால் அணுகுமுறை மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஆனால் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் தோல்வி அடைந்த விதம், மீண்டும் பாஸ்பால் பற்றி விமர்சனங்களை பெரிய அளவில் கிளப்பி இருக்கிறது.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இது குறித்து கூறும் பொழுது “இந்த வாரம் பாஸ்பாலின் மொத்த பலவீனமும் வெளிப்பட்டு விடும் என நான் பயப்படுகிறேன். பாஸ்பால் செயல்படும் பொழுது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால்பொதுவாக அப்படி கிடையாது.

முதல் போட்டியின் ஆடுகளம் எல்லாமே எடுபடும் வகையில் இருந்தது. இதன் காரணமாக அங்கு பாஸ்பால் முறை வெற்றியை தந்தது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளின் ஆடுகளமும் அப்படியானவை கிடையாது. இப்படியான ஆடுகளத்தில் நீங்கள் வெறும் பாசிட்டிவ் அணுகுமுறையுடன் ஆடினால் போதாது. நீங்கள் பொது அறிவையும் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க : “தம்பிங்களா இங்கிலாந்துக்கு இவ்வளவு தொந்தரவா கொடுப்பிங்க?” – சச்சின் ஸ்பெஷல் மெசேஜ்

உண்மையாக எடுத்துக் கொண்டால், தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தும். அவர்கள் இந்த அணுகுமுறையால் சில போட்டிகளை தோற்று இருக்கிறார்கள். ஆனால் எப்பொழுதும் அவர்கள் எதிரணிகளால் முழுமையாக வீழ்த்தப்பட்டது கிடையாது. இதுவே அவர்களுக்கு முதல்முறையாக இருக்கலாம்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -