ஹெட்கிட்ட நடந்ததை விட.. சிராஜ் மோசமா ஒரு தப்பு செய்றார்.. ஐசிசி எப்படி விட்டது? – மைக்கேல் கிளார்க் விமர்சனம்

0
453
Clarke

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் ஒரு குறிப்பிட்ட தவறை தொடர்ந்து செய்வதாகவும் அதற்கு எப்படி அவர் தண்டிக்கப்படாமல் இருக்கிறார்? எனவும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் திடீரென பெரிய பேசுபொருளாகி இருக்கிறார். களத்தில் ஹெட்டை அவுட் செய்து சிராஜ் அவரை வெளியே செல் என கை நீட்டி பேசியது தற்பொழுது பெரிய விவாதமாக மாறுகிறது. ஆனால் மைக்கேல் கிளார்க் இதைத் தாண்டி வேறொரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மைக்கேல் கிளாக்கை தொடரும் மார்க் டைலர்

ஆஸ்திரேலியா அணியின் இன்னொரு முன்னாள் கேப்டன் மார்க் டைலர் முகமது சிராஜ் நடுவரிடம் எல்பிடபிள்யு குறித்து எந்த அப்பீலும் செய்வதில்லை என்றும், அவர் நேராக விக்கெட் கீப்பரை தாண்டி சென்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார் என்றும், இப்படி செய்வது போட்டியையும் நடுவரையும் அவமதிப்பது என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

மேலும் முகமது சிராஜ் தொடர்ந்து இப்படி செய்வதை தடுக்க பல நடுவர் அல்லது மேட்ச் ரெப்ரரி யாராவது ஒருவர் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டிருக்கிறார். தற்போது இரண்டு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்கள் முகமது சிராஜ் மீது யாரும் பார்க்காத கோணத்தில் இருந்து ஒரு பெரிய புகாரை கொண்டு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

சிராஜ் தண்டிக்கப்படாதது ஆச்சரியம்

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “எல்பிடபிள்யூக்களுக்கு மேல் முறையீடு செய்யாததற்காகவும் நடுவர்களிடம் கேட்காததற்காகவும் முகமது சிராஜிக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். முகமது சிராஜ் பந்தை பேடில் அடித்து விட்டு உறுதியாக அவுட் ஆகிவிட்டது போல ஓடிக்கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு ஐசிசி எப்படி அபராதம் விதிக்காமல் இருக்கிறது? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”

இதையும் படிங்க : ரோகித் இத செய்யறதா இருந்தா.. ஷமிய ஆட்றது வீண்தான்.. அவர விட்டுருங்க – பாக் பசித் அலி கருத்து

“ஏனென்றால் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் விளையாடும் காலத்தில் இப்படி யாராவது செய்தால், உடனடியாக அந்த வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடும். சிராஜ் ஹெட்டிடம் நடந்ததை விட இந்த விஷயத்தைநான் மிகவும் மோசமாக கருதுகிறேன். நீங்கள் விரும்பும் எந்த அவுட்டுக்கும் மேல்முறையீடு செய்வது நல்லது. நீங்கள் திரும்பி நடுவரிடம் ஒருமுறை அவுட் கேட்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -