கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 50 பந்தில் 97 ரன்கள் எடுத்தார். தற்போது அவரது இன்னிங்ஸ் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டி இருக்கிறார்.
இந்திய அணியில் தொடர்ந்து சஞ்சு சாம்சன் இடம் கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. மேலும் இந்த டி20 உலகக் கோப்பையுடன் அவர் இந்திய ஜெர்சியை அணிய வாய்ப்பு இல்லை என பல கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் தான் அவரிடமிருந்து மிகச் சிறப்பான இன்னிங்ஸ் வந்திருக்கிறது.
ரேடாரிலேயே இல்லை
இந்த நிலையில் சஞ்சு சாம்சன் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? தான் அவர் குறித்து என்ன நினைத்து வைத்திருந்தேன்? என்பது குறித்து மனம் திறந்து மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது “இந்த முழு தொடரிலும் எனக்கு சஞ்சு சாம்சன் என்னுடைய ரேடாரின் கீழ் போய்விட்டார். முதலில் அவரை அணியில் சேர்க்கக்கூடாது என்று பேசப்பட்டது. பிறகு அவர் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் விளையாட வைக்கப்படுவாரா என்கின்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் விளையாட வைக்கப்படவில்லை. அப்போது வெளியில் அமர்ந்திருந்த சாம்சன் ‘எனக்கு வாய்ப்பு கிடைக்காது. இனி ஒரு போட்டியிலும் விளையாட முடியாது’ என்று நினைத்திருப்பார்”
இவர்தான் அந்த வீரர்
“அழுத்தமான நேரங்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை காட்டி தனக்கு கிடைத்த வாய்ப்பை இரண்டு கைகளாலும் அவர் பற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த சில போட்டிகளாக அதிகம் பேசப்படாமல் போன வீரர் சஞ்சு சாம்சன்தான் எனக்கு”
இதையும் படிங்க: பாகிஸ்தான் கிரிக்கெட் பக்கம் திரும்பிய அமீர்.. வீரர்களுக்கு இந்த உச்சபட்ச தண்டனையை கொடுங்க – புதிய கருத்து
“மீண்டும் அவர் மட்டும் ரன் எடுக்காமல் இருந்திருந்தால் இந்தியா பக்கம் இந்த போட்டி நிச்சயம் வந்திருக்காது. இதற்காக சஞ்சு சாம்சன் பெருமைப்பட வேண்டும். தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் முழுமையாக நிரூபித்து இருக்கிறார். இந்த வடிவ கிரிக்கெட்டில் நெருக்கடி இருக்கும் பொழுது நிச்சயம் அவருடைய திறமை வெளிப்படும் அளவுக்கு அவர் திறமையானவர்” என்று கூறி இருக்கிறார்.






