இந்திய கிரிக்கெட்

பும்ரா இல்லை.. இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டு பவுலர் இவர்தான்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து மைக்கேல் கிளார்க்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் போது மற்ற வீரர்களை காட்டிலும் இந்த வீரர் முக்கிய காரணியாக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இந்திய அணியை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என்ற இரு பெரிய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனால் சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த அணியை பொறுத்தவரை இளம் அணியாக இருந்தாலும் வலிமையான பேட்டிங் இருக்கிறது.

அதேபோல பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியிடம் அனுபவமான பந்து வீச்சு வரிசை இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு வலு சேர்ப்பதாக அமையும். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “குல்தீப் யாதவை இந்தியாவை விட வெளி மைதானங்களில் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவின் முதல் தேர்வு சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் திறமையை அவர் பெற்றுள்ளார் என்று நினைக்கிறேன். அவர் ஒரு மேட்ச் வின்னர் என்று நினைக்கிறேன். மேலும் அவர் ஒரு எக்ஸ் பேக்டராக இருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றால் அதில் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று தோன்றுகிறது.

இதையும் படிங்க:ரோகித் எங்களை திட்டுவாரு.. ஆனா எனக்கு விராட் கேப்டன்சியில இது ரொம்ப பிடிக்கும் – கில் வெளியிட்ட தகவல்

இந்திய அணியில் அவர் ஒரு பெரிய வீரர் என்பது எனது கருத்தாகும்” என மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணிகளும் சில முன்னணி பவுலர்கள் காயம் அடைந்திருக்க டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி வரலாறு படைக்குமா? அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -
Published by

Recent Posts