இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் இருந்திருந்தால் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்று இருக்க முடியாது என வெளிப்படையாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஒன்றுக்கு ஒன்று என சம நிலையில் இருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தாக இன்று நான்காவது போட்டி நடைபெற இருக்கிறது.
அவர்கள் இருந்திருந்தால் வித்தியாசமாக மாறும்
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது ” பும்ரா உடன் இந்தியா ஒரு வித்தியாசமான அணி. நாம் பார்க்கக்கூடிய மிக முக்கியமான மற்றொரு விஷயம் இதுதான். இவர்கள் எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார்கள். இந்திய டி20 அணி ஆஸ்திரேலியாவுக்கு புதியது. அவர்கள் செட்டில் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்”
“அதே சமயத்தில் பும்ரா இந்திய அணியில் இடம் பெற்றால் விஷயங்கள் வித்தியாசமாக மாறும். அவருடன் இணைந்து ஹர்திக் பாண்டியா இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. இப்போது இந்த தொடர் வேறு மாதிரி இருந்திருக்கும்”
டி20 தொடர் சுவாரஸ்யமானதாக மாறும்
“பும்ரா இந்த டி20 தொடரில் பந்து வீசுவதை பார்க்கும் பொழுது அவர் மிகவும் தனித்துவமானவராக தெரிகிறார். அவர் உண்மையில் மிகச் சிறந்த ஒரு வீரர். ஒரு தனி வீரராக இருந்து வெற்றிக்கும் தோல்விக்கும் நடுவில் ஒரு வரையறையை உருவாக்கும் அளவுக்கு அவர் சிறந்தவர்”
இதையும் படிங்க: கம்பீர்தான் அபிஷேக் அதிரடிக்கு காரணம்.. கேரி கிரிஸ்டன் காலத்தில் எனக்கு நடந்தது – யுவராஜ் சிங் பேச்சு
“தற்போது இந்த டி20 தொடர் மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் இரண்டு அணியும் தலா ஒரு போட்டியை வென்று இருக்கின்றன. இந்தியா கடைசி போட்டியை வென்றதால் அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும். மேலும் நான்காவது போட்டி நடைபெறும் கப்பா மைதானம் மெதுவாக கொஞ்சம் இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா விளையாடும் முறைக்கு சாதகமாக இருக்கும். இவர்கள் எப்படிப்பட்ட அணியை கொண்டு வருகிறார்கள்” என்று பார்ப்பது சுவாரசியமானது என்று கூறி இருக்கிறார்.






