கம்பீர்தான் அபிஷேக் அதிரடிக்கு காரணம்.. கேரி கிரிஸ்டன் காலத்தில் எனக்கு நடந்தது – யுவராஜ் சிங் பேச்சு

0
47
Yuvraj

அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாட பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் முக்கிய காரணம் என யுவராஜ் சிங் கூறியிருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபிஷேக் சர்மா சிறப்பான முறையில் விளையாட வருகின்ற காரணத்தினால், அவரால் எல்லா சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாட முடிவதால், அவர் குறித்த மதிப்பீடு அதிகரித்து வருகிறது.

- Advertisement -

யுவராஜ் சிங்கின் முந்தைய பேச்சு

யுவராஜ் சிங் ஆரம்பத்தில் அபிஷேக் ஷர்மா புத்திசாலித்தனமாக விளையாடுவது மிகவும் முக்கியம் என தொடர்ந்து கூறி வந்தார். அதிரடியாக விளையாடுகிறேன் என விக்கெட்டை இழந்து விடுவது முட்டாள்தனமானது என்றும் சில நேரங்களில் கொஞ்சம் கோபமாகவே பேசி இருந்தார்.

முதல் அபிஷேக் ஷர்மா தான் டிக்கெட்டை பற்றி கவலைப்படாமல் விளையாடினால் மட்டுமே தன்னால் சிறப்பாக விளையாட முடிகிறது என்று தெரிவித்திருந்தார். தற்போது இதை ஏற்றுக் கொண்டுள்ள அவரது குருவான யுவராஜ் சிங் அபிஷேக் ஷர்மாவின் அதிரடிக்கு கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ்தான் காரணம் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

எனக்கும் இதான் நடந்தது

இதுகுறித்து யுவராஜ் சிங் பேசும்பொழுது ” ஒரு வீரர் பயமில்லாமல் விளையாடுவது என்பது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கொடுக்கும் ஆதரவால் வருகிறது. அபிஷேக் ஷர்மா அதிரடிக்கு பின்னாலும் இதுதான் காரணமாக இருக்கிறது. நான் இந்திய அணியில் விளையாடிய பொழுது பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் இருந்தபோது, அவர் என்னிடம் களத்திற்கு சென்று என்னுடைய விளையாட்டை அச்சம் இல்லாமல் விளையாட வேண்டும் என்று கூறினார். அதுதான் நான் அங்கு சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது”

இதையும் படிங்க : அபிஷேக் வேற மாதிரி ஒரு பிளேயர்.. அவர் இந்த இரண்டு விஷயங்களை சாதாரணமாக செய்யறாரு – ஷேன் வாட்சன் பாராட்டு

“எனவே சூரியகுமார் யாதவும் பயிற்சியாளர் கம்பீரும் அபிஷேக் ஷர்மாவை அவருடைய ஆட்டத்தை சென்று ஆட சொல்கிறார்கள். மேலும் அவர் அதிரடியாக விளையாடும் பொழுது 10 போட்டிகளில் ஆறு போட்டியை இந்திய அணிக்கு வென்று தர முடியும் என்று நம்பிக்கை கொடுக்கிறார்கள். தற்பொழுது இதன் படி தான் நடந்து வருகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -