ஆஸி கிடையாது.. இந்தியாதான் டி20 உ.கோ-யை வெல்லும்.. காரணம் இதுதான் – மைக்கேல் கிளார்க் கருத்து

0
1517
Clarke

இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இந்தியா இருக்கும் என பல கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வகையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் இதே கருத்தை கூறியிருக்கிறார்.

தற்போது நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்ற இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைகளில் பந்து திரும்பியும், தாழ்வாகவும், மெதுவாகவும் வரும். இங்கு அதிரடியாக தொடர்ந்து விளையாடி விட முடியாது. எனவே இளமையும் அனுபவமும் கொண்ட சரிசமமான ஒரு பேட்டிங் யூனிட் தேவையாக இருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய டி20 அணிக்கு திரும்பி இருக்கின்ற காரணத்தினால், பேட்டிங் யூனிட்டும் வலிமையாக இருக்கிறது.

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “இந்த உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அதிகபட்ச வாய்ப்பு இருக்கும் அணியாக பார்த்தால் அது இந்திய அணியாகத்தான் இருக்கும். அவர்கள் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய தயாரிப்பு சிறப்பாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் கரீபியன் சூழ்நிலைகள் இந்தியாவில் இருந்து வேறுபட்டதுதான். ஆனால் இந்தியாவோடு சேர்த்து ஒற்றுமைகள் நிறைய இருக்கிறது. இதை இந்திய வீரர்கள் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள்.

இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலியா அணியில் இருந்து மிகவும் வேறுபட்ட ஒரு ரிஸ்கை எடுத்து இருக்கிறது. அது என்னவென்றால் அவர்கள் பெரிதும் சுழல் பந்துவீச்சை நம்பி நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை அணியில் சேர்த்து இருக்கிறார்கள். நான் கரீபியனில் விளையாடிய அனுபவத்தில் வெற்றியில் சுழல் பந்துவீச்சின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரெய்னாவுக்கு கால் பண்ணேன்.. அண்ணனா மரியாதை கொடுத்து அதை டெலிட் பண்ணிட்டாரு – ஷாகித் அப்ரிடி பேச்சு

எனவே இந்த டி20 உலக கோப்பையை யார் வெல்லப் போகிறார்கள் என்பதில் மற்ற எல்லா அணிகளுக்கும் இந்தியாதான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது. இந்தியாவோடு ஒப்பிட்டு ஆஸ்திரேலியாவின் முக்கிய பலவீனம் என்று பார்த்தால், அவர்கள் நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டு வருகிறார்கள் ஆஸ்திரேலியாவுக்கு அப்படி இல்லை” என்று கூறி இருக்கிறார்.