நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியினர் இந்திய அணிக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்ய மாட்டார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி துவங்குவதற்கு இடையில் இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடர் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு தற்போது உச்ச நிலையில் இருந்து வருகிறது.
பார்டர் கவாஸ்கர் தொடரின் முகம் விராட் கோலி
தற்போது இந்த டெஸ்ட் தொடரின் முகமாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியா மீடியாக்கள் பிம்பப்படுத்தி இருக்கின்றன. தற்போது இந்த தொடர் குறித்து பேசப்படுவதில் விராட் கோலி குறிப்பு மட்டுமே 75 சதவீதத்திற்கும் மேலான செய்திகள் இடம் பெறுகிறது. அவரைச் சுற்றியே மொத்த பேச்சுகளும் அமைகிறது.
இதனால் விராட் கோலி மீது ஆஸ்திரேலியா அணியின் கவனமும் குவிந்திருக்கிறது. மேலும் தற்போது பேட்டிங் ஃபார்மில் இல்லாத விராட் கோலிக்கு இப்படியான முக்கியத்துவம் அழுத்தமாக மாறுமா அல்லது வழக்கம் போல் அவர் இப்படியான விஷயங்களை ஊக்கமாக எடுத்துக் கொள்வாரா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
ஆஸ்திரேலியா இந்த முட்டாள்தனத்தை செய்யாது
விராட் கோலி குறித்து மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் வம்புக்கு செல்ல மாட்டார்கள். இப்படியான ஒரு முட்டாள்தனத்தை ஆஸ்திரேலியா வீரர்கள் செய்ய மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி அவர் தன்னுடன் சண்டையிட வேண்டும் என்று விரும்புகிறார். அதன் மூலம் அவர் ஊக்கம் பெறுகிறார்”
“எனவே இப்படியான ஒரு வாய்ப்பை ஆஸ்திரேலிய வீரர்கள் அவருக்கு வழங்க மாட்டார்கள். மேலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் விராட் கோலி ரன்கள் குவிக்க வேண்டும். விராட் கோலி முதலில் ரன்கள் குவித்தார் என்றால் அவர் அந்தத் தொடர் முழுக்க மிகச் சிறப்பாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது”
இதையும் படிங்க : நான் ஏலத்துக்கு வந்தது பணத்துக்காக இல்ல.. கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட்.. என்ன நடந்தது?
“ஒரு ஆஸ்திரேலியனாக ஆஸ்திரேலிய அணி விராட் கோலி அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் முதலில் ஊக்கம் பெற்று விட்டால் அதற்குப் பிறகு அதிரடியாக இறங்கி ரன்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார். அவரைச் சுற்றி தற்போது இருக்கும் பில்டப்பை பாருங்கள். இவை அனைத்தும் அவரை தூண்டிவிடும்” என்று கூறியிருக்கிறார்.






