இது கம்மின்ஸ் காலம்.. ஸ்மித்தான் பாவம்.. ஆனா இந்திய அணிக்கு சம்பவம் இருக்கு – மைக்கேல் பெவன் பேட்டி

0
163
Bevan

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்த முறை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் கூறி இருக்கிறார்.

உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஃபினிஷர் ஆகவும், சீராக ரன்கள் குவிப்பதில் வல்லவருமான மைக்கேல் பெவனை 90களில் கிரிக்கெட் பார்த்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவரிடம் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்து கேட்ட பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

காலியான வார்னர் இடத்தால் குழப்பம்

வெற்றிகரமான துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட காரணத்தினால், ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய இடத்திற்கு யாரை களம் இறக்குவது? என்பது பெரிய கேள்வியாக இருந்தது.

இதற்கு கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்தை துவக்க ஆட்டக்காரராக அனுப்புவது என முடிவு செய்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் மிகப் பெரிய அளவில் ரன்கள் குவித்த ஸ்மித்துக்கு துவக்க இடம் சரியாக அமையவில்லை. மேலும் புதிய பதில் அவர் விக்கெட்டை எளிதாக கைப்பற்றவும் அதிக வாய்ப்புகள் உருவானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்புகள்

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள மைக்கேல் பெவன் கூறும் பொழுது “ஸ்மித் ஏற்கனவே விளையாடி வரும் இடத்தில் மிகவும் வெற்றிகரமானவராக இருந்தார். அவரை துவக்க வீரராக மாற்றுவதற்கு எந்த காரணமும் இல்லை. ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் டேவிட் வார்னர் இடத்திற்கு புதிய துவக்க ஆட்டக்காரரை கண்டுபிடிக்க வேண்டும். தேவையான துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டுக்கு திரும்ப வரீங்களா?.. மறைமுகமாக ஸ்டோக்சை தாக்கிய ரோகித் சர்மா – பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுவாரசியம்

கம்மின்ஸ் எரா உருவாகி இருக்கிறது. கடந்த முறைகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் டெஸ்ட் தொடரை வென்று உள்ளது. ஆனாலும் இந்த குறை ஆஸ்திரேலியா அணி வெல்வதற்குதான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு இன்னும் ஹோம் அட்வான்டேஜ் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே இந்த முறை ஆஸ்திரேலியா அணி வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -