இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக டி20 மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக சூரியகுமார் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்பொழுது அதற்குரிய சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக நிச்சயமாக அவர் குணமடைந்து மீண்டும் விளையாடுவார் என்று நம்பிக்கையுடன் கூறப்பட்ட நிலையில், அப்பொழுது அவர் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
முதல் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலையில் சூர்யகுமார் யாதவ்
மும்பை இந்தியன்ஸ் அணி அதனுடைய முதல் போட்டியில் டெல்லி அணியை வருகிற மார்ச் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி மும்பையில் இந்திய நேரப்படி மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்க இருக்கிறது.
தற்பொழுது வந்த தகவலின் படி சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று நமக்கு தெரிய வந்துள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணிகள் மோதும் மும்பை அணியை அதனுடைய 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. இப்போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கும் இடையில் ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில், சூரியகுமார் யாதவ் இரண்டாவது போட்டிக்குள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்று கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மும்பை அணிக்கு இரண்டாவது போட்டி முதல் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம்.
பயோ பபுளில் இணைந்துள்ள ரோஹித் மற்றும் பும்ரா
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே மும்பை அணியின் கேப்டன் ரோஹித் மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் மும்பை இந்தியன்ஸ் பயோ பபுளில் இணைந்து விட்டனர். தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பயிற்சி எடுத்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.