உலக கிரிக்கெட்

என் கையில் எழுதி.. ஞாபகம் வச்சுதான்.. கேப்டனா பிளேயர்ஸ்க்கு இதை செஞ்சிட்டு வரேன் – எம்ஐ கேப்டன் பேட்டி

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளும் மோதுகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ரஷீத் கான் கேப்டன் பொறுப்பு குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

எம்ஐ சன்ரைசர்ஸ் இறுதிப்போட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை போன்று தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில் எம்ஐ அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்த இரண்டு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் ரஷீத்கான் தலைமையிலான எம்ஐ அணி இந்தத் தொடரின் புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள எம்ஐ அணி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ரஷித் கான் போட்டியின் போது சில விஷயங்களை மறந்து விடுவதாகவும், அதனால் நான் விஷயங்களை கையில் எழுதி வைத்து ஞாபகப்படுத்திக் கொள்வதாகவும் சுவாரசியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கையில் எழுதி வைக்கிறேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். போட்டியின் போது கேப்டனாக சில விஷயங்களை மறந்து விடுகிறோம். எனவே அதனை தவிர்க்க அடுத்த ஓவரை பற்றி தெரிந்து கொள்ள என் கையில் அது குறித்த விஷயங்களை எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆடுகளத்தை பொறுத்தவரை அது சுழற் பந்துவீச்சுக்கு நன்றாக சாதகமாக இருக்கும்போது ஐந்து அல்லது ஆறு விக்கெட்டுகள் வீழ்த்துவது எனக்கு பிடிக்காது.

இதையும் படிங்க:கோலி எனும் மந்திரமே காரணம்.. அவர் மட்டும் இல்லனா எனக்கு இது நடந்திருக்காது – இங்கி ஜெகோப் பெத்தல்

ஆடுகளத்தில் எந்த திருப்பமும் இல்லாமல் எந்த உயிரும் இல்லாமல் இருக்கும்போது நல்ல எக்காணமி ரேட்டுடன் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தும் போது அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்” என்று ரஷித் கான் கூறியிருக்கிறார். இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஐபிஎல் உரிமையாளர்களின் அணிகளான எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன்கேப் அணிகள் விளையாடுவதால் இந்தப் போட்டி இந்திய ரசிகர்கள் இடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts