இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டி நடைபெற்ற முடிந்த நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணி வீரர் ஜேக்கோப் பெத்தல் இந்திய ரசிகர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆர்சிபி அணியில் பெத்தல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வீரரான ஜேக்கப் பெத்தல் இங்கிலாந்து அணிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்காக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய பெத்தல் 67 பந்துகளை எதிர்கொண்டு நான்கு பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்தார். மேலும் இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களம் இறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய ரசிகர்களிடம் தனக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு விராட் கோலி தான் காரணம்
இது குறித்து பெத்தல் விரிவாக கூறும்போது “நான் ஆர்சிபி அணிக்காக விளையாடுவதற்கு எதிர்நோக்கி இருக்கிறேன். ஆர்சிபி ஒரு சிறந்த அணி இங்கிருக்கும் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன். நான் சென்ற ஒவ்வொரு மைதானத்திலும், மைதானத்தில் உள்ளே விளையாடச் செல்லும்போது ரசிகர்கள் அனைவரும் ஆர்சிபி ஆர்சிபி என்ற கோஷமிட தொடங்குகிறார்கள். நிச்சயமாக இங்கு பெரிய ஆதரவு இருக்கிறது. விராட் கோலி போன்ற வீரர்களுடன் சேர்ந்து விளையாடுவது மிகவும் அருமையாக இருக்கும்.
இதையும் படிங்க:கிரிக்கெட்டையே மறந்துட்டேன்.. நான் அணியை விட்டு வெளியேற.. இந்த விஷயம் மட்டுமே காரணம் – பாக் பகார் ஜமான் பேட்டி
மேலும் இந்திய அணியின் வீரர்கள் எங்களை விட குறைந்த தவறுகளை செய்திருக்கிறார்கள். ஒருவருக்கு எதிராக விளையாடும் போது நீங்கள் அதே விளையாட்டை விளையாடுவீர்கள் என்பதை உணர்வீர்கள். மேலும் நீங்கள் செய்யக்கூடிய தவறுகளை அவர்களும் செய்ய முடியும். ஆனால் அந்த நபர்கள் தவறுகள் செய்யாமல் இருப்பதில் மிகவும் சிறந்தவர்கள் என்பது தெளிவாகிறது” என்று கூறி இருக்கிறார்.






