உலக கிரிக்கெட்

10 ரன்.. 5 விக்கெட்.. மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி அபார வெற்றி.. சன் ரைசர்ஸ் தோல்வி.. எஸ்ஏ டி 20

தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ டி 20 கிரிக்கெட் லீக் தொடர் வெற்றிகரமாக நேற்று முதல் போட்டியோடு தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணியும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர் கேப் அணிகளும் மோதினர்.

- Advertisement -

இதில் எம்ஐ கேப்டவுன் அணி அதிரடியாக விளையாடி 97 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது.

எம்ஐ சன்ரைசர்ஸ் அணி மோதல்

இந்தியாவில் நடை பெறும் ஐபிஎல் தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று முதல் ஆட்டத்தோடு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் அணியும் எம்ஐ கேப் டவுன் அணியும் மோதின. செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த எம்ஐ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.

எம்ஐ அணி தொடக்கத்தில் மூன்று விக்கெட் இழப்புக்கு 42 ரன்களோடு தடுமாறினாலும் அதற்குப் பின்னர் கூட்டணி சேர்ந்த இன்கிராம் மற்றும் ப்ரெவிஸ் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 39 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 67 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் இளம் வீரர் ப்ரெவீஸ் 29 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர் என 57 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்குப் பிறகு இறுதிக் கட்டத்தில் டிலானோ 12 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

எம்ஐ பந்து வீச்சாளர் சிறப்பான ஆட்டம்

இதனால் 175 ரன்கள் வெற்றி இலக்கோடு சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. இதில் இறுதி கட்டத்தில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய எம்ஐ அணியின் டிலானோ போட்சிடர் தொடக்கம் முதலே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தொடக்க மூன்று விக்கெட்டுகளை போல்ட் மற்றும் அஸ்மதுல்லா வீழ்த்த, அதற்குப் பிறகு மிடில் ஆர்டரை திலானோ பார்த்துக் கொண்டார். 18 பந்துகள் மட்டுமே வீசி வெறும் 10 ரன்கள் விட்டுக் கொடுத்ததோடு 5 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தி எம்ஐ அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இதையும் படிங்க:கேஎல் ராகுலுக்கு ஜாக்பாட்.. இந்திய அணியின் அடுத்த மாஸ்டர் பிளான்.. சாம்பியன் கோப்பையை வெல்ல புது திட்டம்

எம்ஐ அணியின் கேப்டன் ரஷித் கான் இந்த போட்டியில் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சன்ரைசர்ஸ் அணி டிலானோவின் அபாரமான பந்துவீச்சால் 15 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 97 ரன்கள் வித்தியாசத்தில் எம்ஐ அணியின் முதல் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது. ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய டீலானோ ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -
Published by