எஸ்ஏ சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணியும் பார்ல் ராயல்ஸ் அணியும் விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போன்று தென்னாப்பிரிக்காவில் தற்போது எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரசித் கான் தலைமையிலான எம்ஐ கேப் டவுன் அணி மற்றும் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி களம் இறங்கி விளையாடின. இதில் டாஸ் வென்ற எம்ஐ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 8 ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வாண்டர்டசன் ஓரளவு நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
33 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் ரிசா ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 57 ரன்கள் விளாசினார். அதற்குப் பிறகு பின்னால் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டம் இழக்க எம்ஐ அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக பார்ல் ராயல்ஸ் அணியின் கல்லீம் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தினேஷ் கார்த்திக் டேவிட் மில்லர் ஏமாற்றம்
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பார்ல் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரிட்டோரியஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் 3.1 ஓவரில் 38 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இதில் பிரிட்டோரியஸ் 12 பந்துகளில் 26 ரன், ஜோ ரூட் 14 பந்தில் 26 ரன் என அதிரடியாக விளையாடிவிட்டு வெளியேறினர். ஆனால் இதனை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதையும் படிங்க:கபில் தேவ் வாழ்க்கை முழுக்க இதை செஞ்சாரு.. பும்ரா செஞ்சது ஒரு விஷயமே இல்லை – பல்விந்தர் சந்து பேட்டி
குறிப்பாக கேப்டன் டேவிட் மில்லர் ஒரு ரன், தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் ரன் அவுட் ஆக இறுதியாக முஜீப் 21 பந்தில் மூன்று சிக்சர் உடன் 34 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிந்ததால் ராயல்ஸ் அணியால் இறுதியாக ஒன்பது விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரபாடா 4 ஓவர்களில் இரண்டு ஓவர் மெய்டனுடன் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக 12 பந்துகளில் ஒரு ரன் கூட விட்டு தராமல் 2 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.






