இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில் பும்ரா குறித்து முன்னாள் இந்திய வீரர் பல்விந்தர் சந்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
காயத்தால் வெளியேறிய பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கிற வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அந்தத் தொடரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்ததோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத விதமாக காயம் அடைந்து வெளியேறினார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கிய நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோல்வியையும் சந்தித்தது.
பும்ராவின் காயத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது என்னவென்றால் அவரது பணிச்சுமை மேலாண்மை காரணமாக கூறப்பட்டது. அதாவது இந்த தொடரில் பும்ரா 150 ஓவர்கள் வரை வீசி இருக்கிறார் எனவும், அவருக்கு கொடுக்கப்பட்ட அதிக வேலைப்பளுவின் காரணமாகவே அவர் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் கபில்தேவ் அவர்களோடு விளையாடிய சக வீரர் பல்வந்தர் சந்து இதனை மறுத்து பேசியிருக்கிறார்.
இந்த கருத்துக்கு நான் உடன்படவில்லை
இதுகுறித்து அவர் கூறும் போது “வேலைப்பளு?அவர் எத்தனை ஓவர்கள் வரை வீசினார்? 150 ஓவர்கள் வரை வீசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது ஐந்து போட்டிகள் அல்லது 9 இன்னிங்ஸ் என்று கூறலாம் அல்லவா? அது ஒரு இன்னிங்ஸ்க்கு சரியாக 16 ஓவர்கள் மேலும் ஒரு போட்டிக்கு சரியாக 30 ஓவர்கள் என்று வரும். மேலும் அந்த 15க்கும் மேற்பட்ட ஓவர்களை ஒரே நேரத்தில் வீசுவதில்லை. அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்பெல்களில் இந்த ஓவர்களை பிரித்து வீசி இருக்கிறார்.
இதையும் படிங்க:1000 ரன்.. ஒவ்வொரு வருஷமும் அடிக்கிறாரு.. இந்திய அணி அடுத்த புஜாராவை மிஸ் பண்ணுது – உத்தப்பா ஆதங்கம்
இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதை வேலை பளு மேலாண்மை என்று கூறுவது பெரிய முட்டாள்தனம். எங்கள் காலத்தில் நாங்கள் 25 முதல் 30 ஓவர்கள் வரை பந்து வீசினோம். கபில் தேவ் தனது வாழ்க்கை முழுவதிலும் பந்து வீசினார். நீங்கள் பந்து வீசும் போது உங்கள் உடலும் தசைகளும் சீராக்கப்படுகின்றன. எனவே இந்த பணிச்சுமை மேலாண்மை கருத்துடன் நான் உடன்படவில்லை” என்று கூறி இருக்கிறார்.






