கில் ஐபிஎல் ஆடக்கூடாது.. இதுதான் கம்பீர் விருப்பம்.. அவரே என்கிட்ட சொன்னார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
23
Gambhir

இந்திய வீரர்கள் பணிச்சுமையை மேலாண்மை செய்வதற்கு ஐபிஎல் தொடரில் விளையாடாமல் தவிர்க்கலாம் என கம்பீர் தன்னிடம் தெரிவித்ததாக ஆகாஷ் சோப்ரா அதிரடியான விஷயத்தை கூறியிருக்கிறார்.

தற்போது மூன்று வடிவத்திலும் இந்திய கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் கேப்டன் சுப்மன் கில், அதனால் தென் ஆப்பிரிக்க முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்தில் பிடிப்பு ஏற்பட்டு, பாதியிலேயே விளையாடாமல் வெளியேறினார். மேலும் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி ஆக முடியுமா?

விராட் கோலி இந்திய அணிக்காக மூன்று வடிவத்திலும் தொடர்ந்து விளையாடிய முக்கிய ஒரே வீரராக பலகாலம் இருந்தார். அந்த அளவிற்கு அவர் தன்னுடைய உடல் தகுதியில் கவனம் செலுத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் போல மூன்று வடிவத்திலும் தொடர்ந்து விளையாடிய வீரர்கள் கிடையாது.

இதை எடுத்துக் கொள்ளும் பொழுது சுப்மன் கில் உடல் தகுதி விராட் கோலி அளவுக்கு இருக்காது என்பதுதான் உண்மை. விராட் கோலியின் உடல் தகுதி கால்பந்து வீரர்களுக்கான உடல் தகுதிக்கு சமமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்று வடிவத்திற்கும் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட முடியுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

- Advertisement -

கம்பீர் விருப்பம் இதுதான்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” இந்திய வீரர்கள் தங்களது பணிச்சுமையை நிர்வகிப்பதற்கு ஐபிஎல் தொடரில் விளையாடாமல் தவிர்க்கலாம் என கில் குறித்து நான் கேட்ட பொழுது கம்பீர் கூறினார். இதற்காக நாட்டிற்காக விளையாடுவதை தவிர்க்கக்கூடாது ஆனால் ஐபிஎல் தொடரை தவிர்க்கலாம் என்பதுதான் அவரின் முடிவு”

இதையும் படிங்க : தெஆ 2வது டெஸ்ட்.. கில் இடத்தில் ஆடப்போவது யார்.. புது திட்டங்கள் என்ன? – பேட்டிங் கோச் சிசான்சு கோடக் தகவல்

“மேலும் நீங்கள் ஒரு ஐபிஎல் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தும் போது உங்களுடைய பணிச்சுமை மேலும் அதிகரிக்கிறது. நீங்கள் ஓயாமல் கிரிக்கெட் விளையாடும் பொழுது அது உங்கள் ஃபார்மை பாதிக்கலாம். ஃபார்ம் சரியில்லாத பொழுது நீங்கள் தொடர்ந்து விளையாடினால், மேற்கொண்டு அது இன்னும் மோசம் ஆகி உங்களுக்கு ரன் வருவது நின்றுவிடும். பிறகு நீங்கள் ரன்னுக்காக தேட ஆரம்பித்து விடுவீர்கள். எனவே நாட்டுக்காக விளையாட ஐபிஎல் தொடரை தேவைப்பட்டால் தியாகம் செய்யலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -