வீசிய முதல் ஓவரே சாதனை.. அரிய ரெக்கார்ட் பட்டியலில் இணைந்த மயங்க் யாதவ்.. பங்களாதேஷ் டி20

0
3345

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி தற்போது குவாலியர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் இழந்த வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் புயல் வேகப்பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. அடுத்ததாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டி20 போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆன இளம் இந்திய அணி முதல் போட்டியில் விளையாடி வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் கலக்கிய நட்சத்திர புயல் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இன்று வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய நிலையில் காயம் காரணமாக சில போட்டிகளிலேயே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

- Advertisement -

இதற்குப் பிறகு தனது உடல் நலனில் அதிக கவனம் செலுத்தி காயத்திலிருந்து மீண்டு வந்து இந்திய சர்வதேச அணியில் தனது முதல் போட்டியை விளையாடி வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஆட்டத்தின் ஆறாவது ஓவராக தனது முதல் ஓவரை வீசிய மயங்க் யாதவ் ஆறு பந்துகளில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் அனைத்து பந்துகளையும் டாட் பால் ஆக்கினார். இதன் மூலமாக இந்திய தரப்பில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக வீசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன்னதாக 2006ஆம் ஆண்டு அஜித் அகர்கர் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜோகான்ஸ்பர்கில் தனது அறிமுகப் போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக வீசி இருக்கிறார். அதற்குப் பிறகு 2022ஆம் ஆண்டு அர்ஸ்தீப் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது மயங்க் யாதவும் இந்த போட்டியின் மூலமாக மூன்றாவது வீரராக இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்.

இதையும் படிங்க:விராட் கோலி மாதிரி ஒரு ஆள்.. பாகிஸ்தானுக்கு வந்தா.. இது நிச்சயம் நடக்கும் – யூனிஸ்கான் பேட்டி

சற்று முன்பு வரை வங்கதேச அணி 17.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் மயாங்க் யாதவ் மூன்று ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -