விராட் கோலி மாதிரி ஒரு ஆள்.. பாகிஸ்தானுக்கு வந்தா.. இது நிச்சயம் நடக்கும் – யூனிஸ்கான் பேட்டி

0
462

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆன யூனிஸ்கான் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி கடைசியாக பாகிஸ்தானில் 2008ஆம் ஆண்டு சுற்றுப் பயணம் செய்த நிலையில் அதற்குப் பிறகு உள்நாட்டு பிரச்சினைகளின் காரணமாக இதுவரை இந்தியா பாகிஸ்தானில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் விளையாடவில்லை. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களில் இந்தியாவில் வந்து விளையாடிச் செல்கிறது. பாகிஸ்தான் அணியைப் போன்று இந்தியாவும் பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான விராட் கோலி பாகிஸ்தானில் இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடினார். அதற்குப் பிறகு சர்வதேச அணியில் இடம் பிடித்த பின்னர் பாகிஸ்தானில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஏற்கனவே விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் விராட் கோலி பாகிஸ்தானில் விளையாடினால் ரசிகர்களுக்கு எண்ணிக்கை மேலும் உயரம் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியா கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் இந்தியாவுக்கு செல்லும் போதெல்லாம் எங்களது புகழ் அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் எங்களது திறமைகள் மற்றும் அழுத்தத்தை கையாளும் விதம் ஆகியவை நன்றாக மேம்பட்டன. விராட் கோலி போன்ற இந்திய நட்சத்திரங்களை பார்க்க முழு பாகிஸ்தானும் விரும்புகிறது. அவர் நீண்ட காலத்திற்கு முன்பாக பாகிஸ்தான் வந்து விளையாடினார் என்று நினைக்கிறேன்.

அவர் திரும்பவும் பாகிஸ்தானுக்கு வந்தால் அவரது புகழ் கண்டிப்பாக மேலும் உயரும். அவர் கராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் போன்ற நகரங்களில் அதிக ரன்கள் குவிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடுவது அவ்வளவு எளிதானது இல்லை என்றே தோன்றுகிறது.

இதையும் படிங்க:வெறும் 108 ரன்.. இந்திய பெண்கள் அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.. டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா?

பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெறும். அதில் இந்திய அணி கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் ஹைப்ரிட் மாடலில் அதாவது பாகிஸ்தானில் இல்லாமல் துபாய் அல்லது இலங்கை போன்ற நாடுகளில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது.

- Advertisement -