விராட் ஸ்மித் அசத்துவாங்க.. ஆனா இந்த 22 வயது வீரர் பேட்டிங்கை பார்க்கதான் ஆர்வமா இருக்கேன் – மேத்யூ ஹைடன் பேட்டி

0
1168

நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் பாஸ்கர் டிராபி தற்போது கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இரண்டு முன்னணி அணிகள் விளையாடுவதால் இத்தொடர் மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய வீரர் ஒருவரின் பேட்டிங்கை பார்க்க ஆர்வமாக இருப்பதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு மண்ணில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு முறை நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இரண்டு முறை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. அதில் ஒரு முறை விராட் கோலி தலைமையிலும், மற்றொரு முறை ரகானே தலைமையிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த முறை அனுபவம் மற்றும் இளமை கலந்த அணியாக இந்திய அணி உள்ளது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பதால் முன்பை விட அதிக ஆர்வமாக செயல்படுவார் என்றும் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கைக் காண ஆர்வமாக இருப்பதாகவும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தங்களது இறுதிக் கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆதிக்கம் செலுத்த ஆர்வமாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதுதான் அவர்களுடைய சாதாரணமான இயல்பு. அதை அவர்கள் இருவரும் வித்தியாசமான வழிகளில், வித்தியாசமான பாணிகளில் செய்கிறார்கள். இதுதான் இந்தத் தொடருக்கு மிகவும் முக்கியமானதாகும்.

மேலும் என்னுடைய கருத்துப்படி இந்திய கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் முக்கியமான சொத்தாக இருப்பார். ஆம் அதை அவர் நிரூபித்தும் காட்டுவார். இளம் வீரரான ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது. அவர் நல்ல திறமையான வீரராக இருக்கிறார். குறிப்பாக அவர் விளையாடும் கவர் ஷாட்கள் அபாரமாக இருக்கிறது. பவுன்ஸ் டிராக்குகளில் அவர் எவ்வாறு தன்னை அட்ஜஸ் செய்து விளையாடுகிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:இப்ப பும்ராவ விட பெஸ்ட் யாரும் கிடையாது.. அதுக்கு வித்தியாசமான ஸ்பெஷல் காரணம் இதுதான் – டிம் சவுதி பாராட்டு

இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆன பேட் கம்மின்ஸ் தற்போது வேறு எந்த தொடரிலும் கவனம் செலுத்தாமல் இந்திய டெஸ்ட் தொடருக்கு முழு வீச்சில் தயாராகும் முறையில் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -