ரோகித் ஓபனரா வரக்கூடாது.. பேட்டிங்ல கீழ அவர் ரெக்கார்ட கொஞ்சம் பாருங்க – ஹைடன் ஜாபர் வேண்டுகோள்

0
26
Rohit

நடக்க இருக்கும் ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதற்கு அடுத்து முக்கிய போட்டியில் ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரராக வரக்கூடாது என மேத்தி ஹை டன் மற்றும் வாசிம் ஜாபர் இருவரும் கூறி இருக்கிறார்கள்.

தற்பொழுது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அதிகாரப்பூர்வமாக இடம் பெற்று இருக்கிறார்கள். இத்தோடு மூன்றாவது மாற்று திறக்க ஆட்டக்காரராக விராட் கோலி விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனவே ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வரையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் துவக்க ஆட்டக்காரராக கட்டாயம் களமிறங்குவார்கள் என்று கூறி வருகிறார்கள். இதன் மூலம் விராட் கோலி பவர் பிளேவை பயன்படுத்தி சிறப்பாக ரன்கள் குவிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

அதேவேளையில் மேத்யூ ஹைடன் மற்றும் வாசிம் ஜாபர் இருவரும் ரோகித் சர்மா நான்காவது இடத்தில் அல்லது மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதுவரையில் ரோகித் சர்மா கீழ் வரிசையில் இந்த இடங்களில் 12 போட்டிகளில் விளையாடி, 39 ரன் ஆவரேஜில், 315 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் அவர் நான்கு அரை சதங்களும் அடித்திருக்கிறார்.

இதுகுறித்து வாசிம் ஜாபர் கூறும் பொழுது ” விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வரவேண்டும். நிலைமையை பொறுத்து அடுத்த மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவை களம் இறக்க வேண்டும். ரோகித் சர்மா நல்ல முறையில் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து விளையாடுவார். எனவே பேட்டிங்கில் நான்காவது இடத்தில் இது கவலையாக இருக்காது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா இந்த காரணத்துக்காகவே டி20 உலக கோப்பையை ஜெயிக்கும்.. இது சாதாரணம் இல்ல – நாசர் ஹுசைன் பேட்டி

இது குறித்து மேத்யூ ஹைடன் கூறும் பொழுது ” நான் இதை சொல்வதற்கு முக்கிய காரணம் விராட் கோலி ஆரம்பத்தில் சிக்ஸர்கள் அடிப்பதில் சிறப்பானவர். இதற்குப் பிறகு ரோகித் சர்மா வரும் பொழுது பவர் ஹிட்டிங் விளையாடுவதற்கு ஆட்கள் இருப்பார்கள். பேட்டிங்கில் நான்காவது இடத்தில் ரோஹித் சர்மாவின் புள்ளி விவரங்களை பாருங்கள். அவை மிகவும் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக அவர் துவக்க இடத்தில் வருவதை விட அந்த புள்ளி விபரங்கள் சிறப்பாக இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.