இந்தியா இந்த காரணத்துக்காகவே டி20 உலக கோப்பையை ஜெயிக்கும்.. இது சாதாரணம் இல்ல – நாசர் ஹுசைன் பேட்டி

0
1273
Hussain

இந்த ஆண்டு அடுத்து ஜூன் இரண்டாம் தேதி முதல் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியின் ஒரு குழு அமெரிக்கா நியூயார்க் நகருக்கு சென்றிருக்கிறது. அங்கிருந்து ரோகித் சர்மா கேப்டனாக என்ன மாதிரியான சவால்கள் இருக்கிறது என்று பேட்டியளித்திருக்கிறார்.

மேலும் இந்திய அணியின் முதல் குழுவுடன் இணையாமல் இருந்த ஹர்திக் பாண்டியா லண்டனில் இருந்து நேராக நியூயார்க் வந்து அணியுடன் இணைந்து இருக்கிறார். தற்போது இதில் விராட் கோலி மட்டுமே ஆவணங்கள் சில சரிபார்ப்பு இருக்க வேண்டிய காரணத்தினால் அணியுடன் இணையாமல் இருக்கிறார்.

- Advertisement -

மேலும் அமெரிக்கா சென்று விட்ட இந்திய வீரர்கள் தங்களுடைய பயிற்சிகளை நேற்று முதல் ஆரம்பித்திருக்கிறார்கள். புதிய காலநிலை மற்றும் ஆடுகளத்தன்மைக்கு இந்திய வீரர்கள் மிக வேகமாக தயாராக வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்பொழுது ஒட்டுமொத்த அணிக்கும் சவாலான விஷயமாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளிக்கும் போது “ஒரு கேப்டனுக்கு அணியில் இருக்கும் பல மாதிரியான வீரர்களை சமாளிப்பதுதான் பெரிய சவாலான காரியம் ஆகும். கேப்டன் பதவியில் நான் கற்றுக் கொண்ட மிக முக்கியமான விஷயம், ஒவ்வொரு வீரருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைத்தான். நீங்கள் அப்படி செய்யும்பொழுது அணியின் ஒரு பகுதியாக அவர்கள் உணர்வார்கள். மேலும் உங்களிடம் ஒரு வீரர் எந்த பிரச்சினையாக வந்தாலும் உங்களிடம் அதற்கு தீர்வு இருக்க வேண்டும்.

- Advertisement -

நான் ஒரு கேப்டனாகவும் அதே சமயத்தில் ஒரு வீரராகவும் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை மைதானம் மற்றும் எதிரணிகள் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு கேப்டனாக இதை நானே செய்கிறேன். இதற்காக நான் நீண்ட நேரம் செலவிடுகிறேன். இது போன்ற வேலை வீரர்களுக்கு கிடையாது. இது எனக்கு மட்டுமான வேலை.

இதையும் படிங்க : கேப்டனா பெரிய சவால் சொந்த வீரர்கள் தான்.. கூடுதலா இன்னொரு இந்த வேலையும் செய்யனும் – ரோகித் சர்மா பேட்டி

மேலும் டி20 கிரிக்கெட்டில் வீரர்கள் வித்தியாசமான அணுகுமுறைகளை செய்வதால் இந்த வடிவம் மிகவும் சவாலான ஒன்றாக மாறியிருக்கிறது. எனவே இதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இதற்கு நான் தகுந்த முறையில் தயாராகி வீரர்களுக்கு சரியான தகவல்களை சேர்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -