“அம்பயர் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து ஆடுறாங்க..”- முன்னாள் ஆஸி வீரர் மேத்யூ ஹைடன் விமர்சனம்

0
473

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு காரணம் இவர்தான் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் சர்ச்சையான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில், இந்திய அணி டாஸ் இழந்து முதலில் பேட் செய்தது.
பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் 53 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா அணி ஓரளவு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.

- Advertisement -

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பிறகு ஒன்டவுனில் களரங்கிய மெக்டோர்மெட் ஆஸ்திரேலியா அணியை சரிவில் இருந்து காப்பாற்ற போராடினார். அவருக்கு வேட் சிறுது நேரம் களத்தில் நின்று உதவியாக இருக்க மெக்டோர்மெட் 54 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் போட்டியின் இறுதியில் அர்ஸ்தீப் வீசிய கடைசி ஓவர் சிறிது சர்ச்சையைக் கிளப்பியது. அப்போது வேட் களத்தில் நின்றார்.

அவர் வீசிய 20வது ஓவரின் முதல் பந்து மேத்யூ வேடின் தலைக்கு மேல் சென்றது. அம்பையர் வைட் கொடுப்பார் என்று வேட் எதிர்பார்க்கப்பட, அம்பயர் தர மறுத்ததால் வேட் அதிருப்தி அடைந்தார். இதனை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் நடுவருக்காக சர்ச்சைக்குறிய கருத்துக்களைக் கூறி இணையத்தை க் கலக்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,
“மேத்யூ வேட் எதற்காக வருத்தப்படுகிறார் என்பது காண முடிகிறது. அது தலைக்கு மேல் வீசப்பட்ட ஒரு அகலமான பந்து. அவர் கிரீஸின் மீது நின்று கொண்டிருக்கும்போது பந்து அவரது தலைக்கு மேல் சென்றது. நடுவர் இதனை சரியாகக் கவனித்திருக்க வேண்டும். இந்த ஓவரில் நடுவர் இரண்டாவது முறையாக தனது தவறைச் செய்துள்ளார். பந்து வீசும் போது வேடின் ஒரு கால் கிரீசுக்கு உள்ளே தான் இருந்தது. அம்பயரின் இந்த முடிவு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு நடுவர்களும் இந்திய அணியுடன் சேர்ந்து விளையாடினர்” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

அர்ஸ்தீப் சிங் பந்து வீச்சு சமீப காலமாக அவருக்கு சிறப்பானதாக இல்லை. முதன்முதலில் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல்லில் களம் இறங்கியவர், தனது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை பெற்றார்.

அவர் கடைசியாக டி20 உலக கோப்பையில் விளையாடினார். அதன் பிறகு பஞ்சாப் அணியில் ஓரளவு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.