ஐபிஎல் 2025

2010ல தோனிய பார்த்த மாதிரியே.. இந்த பையன் இப்ப ஐபிஎல்-ல ஆடறத பார்க்க இருக்கு – மேத்யூ ஹைடன்

தற்பொழுது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் பிரப்சிம்ரன் சிங் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு 2010 ஆம் ஆண்டு தோனி அதிரடியாக பேட்டிங் செய்ததை பார்த்தது போலவே இருப்பதாக மேத்யூ ஹைடன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி மொத்தம் 15 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எஞ்சி இருக்கும் மூன்று போட்டியில் ஒன்றை வென்றால் கூட ப்ளே ஆப் சுற்றில் மூன்று அல்லது நான்காவது இடத்தை பிடிக்க முடியும். இரண்டு போட்டிகளை வென்றால் முதல் இரண்டு இடங்களில் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

பிரப்சிம்ரனின் ஸ்பெஷல் சீசன்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிரப்சிம்ரன் சிங் மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 437 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் அதிக ரன் அடித்தவர்களுக்கான பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இவர் துவக்க ஆட்டக்காரராக தரும் சிறப்பான துவக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பதற்கு உதவியாக அமைந்திருக்கிறது.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் மூன்று அரை சதங்கள் தொடர்ந்து அடித்திருக்கிறார். கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல் தற்போது அவர் பெரிய அளவில் நின்று விளையாடுவதில் கவனம் செலுத்துகிறார். அதே சமயத்தில் அவருடைய அதிரடியும் குறைவில்லாமல் இருக்கிறது.

- Advertisement -

இவரைப் பார்க்க தோனி மாதிரியே இருக்கிறது

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பிரப்சிம்ரன் சிங் விளையாடுவதை பார்ப்பதற்கு 2010ஆம் ஆண்டு தோனி விளையாடுவதை பார்த்தது போலவே இருக்கிறது எனவும், இந்த இளம் வீரரின் அதிரடிக்கு முக்கிய காரணங்கள் என்னவென்று விளக்கி இருக்கிறார்.

இதையும் படிங்க : தம்பி ரிஷப் பண்ட் உடனே தோனிக்கு போன் பண்ணு.. இப்ப இந்த நீ 2 விஷயத்தை செய்யணும் – சேவாக் அறிவுரை

இதுகுறித்து ஹைடன் கூறும் பொழுது “பிரப்சிம்ரன் சிங் அபார சக்தியை பெற்றிருக்கிறார். இவர் விளையாடுவதை பார்ப்பதற்கு 2010 ஆம் ஆண்டு கடைசி ஓவரில் தோனி பந்தை அடித்து நொறுக்கியதை பார்த்தது போலவே இருக்கிறது. இவருக்கும் தோனி போலவே குணாதிசயம் இருக்கிறது. இவருடைய பேட் வேகம், உறுதியான அடித்தளம் ஆகியவை இருக்கிறது. மேலும் உயரம் குறைவாக இருப்பதால் பந்துகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியும். அவர் பந்துவீச்சாளர்களை தொடர்ந்து தவறு செய்ய வைக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts