என்னை மாதிரி பசங்களுக்கு.. சிஎஸ்கே கடவுள் கொடுத்த பரிசு.. தோனி இல்லன்னா இது எனக்கு நடந்திருக்காது- பத்திராணா பேட்டி

0
465

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 27ஆம் தேதி முதல் இலங்கையில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடருக்கு பிறகு இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழும் பத்திரனா ஐபிஎல் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அதிலிருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்று விலக, அதற்குப் பிறகு சூரியகுமார் தலைமையில் ஆன இந்திய அணி அனுபவம் மற்றும் இளமை கலந்த வீரர்களுடன் அடுத்த நடைபெறுகிற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு இலங்கை அணியும் புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என தங்களது புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் தற்போது முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் மதிஷா பத்திரானா இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருக்கிறார்.

இவரது இலங்கை அணியுடன் அண்டர் 19 தொடருக்கு பிறகு சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்ததில் இருந்து உலகம் முழுவதும் புகழ்பெற்று தற்போது இலங்கை அணியிலும் நிரந்தர இடம் பிடித்துள்ளார். மேலும் மலிங்கா போன்ற பந்துவீச்சு ஸ்டைல் கொண்டிருப்பதால் அனைவராலும் தற்போது கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறார். இலங்கை அணியில் தனக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது குறித்து பத்திரனா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதில் அவர் கூறும் பொழுது “19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கு பிறகு இலங்கை அணியில் எனக்கு எந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு தொடரிலும் நான் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தேன். ஆனால் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இலங்கை அணியில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றேன். தற்போது இலங்கை அணியின் முக்கிய வீரராகவும் மாறி இருக்கிறேன்.

இதையும் படிங்க:3 ஃபார்மேட் 3 இந்திய அணி.. இங்கிலாந்து மாடலில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செல்லுமா? – கம்பீர் விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. மகிபாய் உடனான ட்ரஸ்ஸிங் ரூம் பகிர்வு என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இலங்கையிலிருந்து வருபவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் மிக முக்கியமாகும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -