இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்து தொடரில் அடுத்த எந்தெந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மிகவும் உறுதியாக கூறியிருக்கிறார்.
இந்த தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெல்ல முடியாவிட்டாலும் கூட டிரா செய்வதற்கு 99% வாய்ப்பு இருந்தது. ஆனால் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் தவற விட்டு முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி தோற்றது. இதன் காரணமாக பும்ரா இரண்டாவது போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
ஒருவேளை முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்து இருந்தால் கூட பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்க முடியும். கிடைத்த நல்ல வாய்ப்பை இந்திய வீரர்கள் புரிந்து கொள்ளாமல் தவற விட்டார்கள். மேலும் இந்திய பந்துவீச்சும் மிக பலவீனமாக இருக்கிறது.
இந்த நிலையில் பும்ரா விளையாடுவது குறித்து பேசி உள்ள மார்க் வுட் கூறும் பொழுது ” பும்ரா அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். பும்ரா அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு முதல் காரணம், அவர்கள் இரண்டுக்கு பூஜ்ஜியம் என இருக்க விரும்ப மாட்டார்கள். உங்களுக்கு உங்கள் அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர் தேவையாக இருக்கிறார்”
இதையும் படிங்க : இப்ப இந்திய அணியில் இவர் பேட்டிங் பண்ணா.. உலகமே டிவி முன்னாடி உட்கார்ந்திருக்கும் – ஹாரி புரூக் பேச்சு
“இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கு விளையாடுவதற்கு பும்ரா நிச்சயம் விரும்புவார். லார்ட்ஸ் பெயர் பலகையில் தன்னுடைய பெயர் பெறுவதை அவர் விரும்பாமல் இருக்க முடியாது. எனவே அவர் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி முடித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.