ஏலத்தில் பல அணிகளுக்கு என்னை வாங்கும் வாய்ப்பு இருந்தும் யாரும் வாங்கவில்லை ; என் விஸ்வாசம் என்றும் பெங்களூர் அணிக்கு மட்டுமே – விராட் கோலி பேச்சு

0
1318
Virat Kohli

ஐ.பி.எல் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது கோப்பையை ஏந்திய அணிகளும், அதற்கு முக்கியக் காரணமாக இருந்த வீரர்களும், கேப்டன்களையும் பற்றிதான். ஆனால் இதையெல்லாம் தாண்டி கோப்பையை வெல்லாத அணி ஒன்றின் வீரர், கேப்டன் நினைவுக்கு வருகிறார் என்றால், அது பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன், இந்நாள் வீரர் விராட்கோலிதான்!

ஐ.பி.எல் தொடரை எடுத்துக்கொண்டால் பதினைந்து ஆண்டுகளாக ஒரே அணிக்காக ஆடிவரும் வீரர் விராட்கோலிதான். இன்று பேட்டிங் பார்ம் அவுட்டில் இருந்தாலும், பெங்களூரு அணிக்காக கிறிஸ் கெயில், டிவிலியர்சுடன் அவர் சேர்ந்து ஆடிய அற்புத ஆட்டங்களை எந்த ஐ.பி.எல் அணியின் இரசிகர்களாலும் மறக்க முடியாது. 2016 ஐ.பி.எல் சீசனின் அவர் நான்கு சதங்கள், ஏழு அரைசதங்களோடு, 16 ஆட்டங்களில், 81 என்ற சராசரியில், 151 ஸ்ட்ரைக்ரேட்டில் குவித்த 973 ரன்களை, இனியொருவர் உடைப்பதென்பது மிக கடினமான காரியமே. அதற்கு அவர் மிகச்சிறந்த வீரராக இருப்பதோடு, மிகச்சிறந்த பேட்டிங் பார்மிலும் இருக்க வேண்டும்.

- Advertisement -

14 வருடங்களாக கோப்பையை வெல்லாத போதும், ஒரு அணியாக பல படுதோல்விகளைச் சந்தித்த போதும், விராட்கோலி மனமொடிந்ததே கிடையாது. களத்தில் எத்தகைய தோல்வி வந்தாலும், அதைத் தூக்கியெறிந்து விட்டு, அடுத்த ஆட்டத்திற்கு வந்து 200% உழைப்பைக் கொட்டுவார். இதுநாள் வரையில் அவர் பெங்களூர் அணியில் அப்படித்தான். இந்திய அணியிலும் அப்படித்தான். ஆனால் ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியை 2013ஆம் ஆண்டு அவர் கேப்டனானதில் இருந்து பெறாமல், வெளியில் பல விமர்சனங்களையும், கேலிகளையும் சந்தித்த பொழுதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பெங்களூர் அணிக்குத் தன்னால் முடிந்த கடைசி சிறப்பான ஒன்றைச் செய்ய வேண்டும் என்கின்ற துடிப்புதான் அவரிடம் இருக்கும்!

காரணம், 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில், அன்டர்-19 வின்னிங் கேப்டனான டெல்லி இளைஞர் விராட்கோலியை விட்டு, அதே அன்டர்-19 டெல்லி வேகப்பந்து வீச்சாளர் ப்ரதீப் சங்வானைத்தான் டெல்லி அணி ஏலத்தில் எடுக்கிறது. அந்தச் சமயத்தில் அவர் மீது நம்பிக்கை வைத்து எடுத்தது பெங்களூர் அணிதான்!

இதுக்குறித்து சமீபத்தில் பேசியிருந்த விராட்கோலி “பல அணிகள் நடுவில் என்னை வாங்க அணுகின. ஆனால் நான் மறுத்துவிட்டேன். காரணம் ஆரம்பத்தில் என்னை யாரும் நம்பாத பொழுது, ஆதரிக்காத பொழுது, என்னை நம்பி ஆதரித்தது பெங்களூர் அணிதான். முதல் மூன்று ஆண்டுகள் எனக்கு நிறைய வாய்ப்புகளையும் கொடுத்தார்கள். நான் பெங்களூர் அணிக்கு விசுவாசமாக இருப்பதென்பது, என் வாழ்க்கையில் நான் எவ்வளவு உண்மையாக இருக்கிறேன் என்பதற்கு சமமானது” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -