இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்க்க மாட்டேன்.. இது என்ன பெரிய அநியாயமா இருக்கு – மனோஜ் திவாரி கொதிப்பு

0
9
Manoj

2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியை தான் பார்க்க மாட்டேன் என்றும், பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுவதை ஏற்க முடியாது எனவும் இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.

சமீபத்தில் காஷ்மீரில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றது தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து இனி இரு நாடுகளும் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் மோதி கொள்ளாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

லெஜென்ட்ஸ் டி20 லீக் சம்பவம்

இந்த நிலையில் இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற மூத்த வீரர்களுக்கான லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடரின் அரை இறுதியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட விரும்பாமல் தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் என பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த நிலையில் இந்திய விளையாட்டு அமைச்சகம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட அனுமதி கொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் இரண்டு முறை மோதுவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

மனோஜ் திவாரி எதிர்ப்பு

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது ” இரு நாடுகளுக்கு இடையே இந்த போட்டி நடைபெறப் போவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவில் காஷ்மீரில் நடைபெற்ற அந்த மோசமான சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டுக்கு நாம் தக்க பதிலடி கொடுப்போம் என்று பேசப்பட்டு வந்தது. சில மாதங்களில் எல்லாம் மறந்து விட்டு அந்த நாட்டுக்கு எதிராக நாம் விளையாடுகிறோம். இதை நம்புவது எனக்கு கடினமாக இருக்கிறது. இங்கு மனித உயிரின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகிவிட்டது”

இதையும் படிங்க : கம்பீர தப்பா நினைக்காதீங்க.. அவர் எங்ககிட்ட இதையெல்லாம் செய்ற ஆள்தான் – ரிங்கு சிங் பேட்டி

“பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதால் என்ன சாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது? ஒரு மனித உயிரின் மதிப்பு விளையாட்டை விட மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். நான் இந்த போட்டியை நிச்சயம் பார்க்கப் போவது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -