உச்சகட்ட பார்ம்ல இருந்தேன்.. அந்த முடிவால் என் கிரிக்கெட் வாழ்க்கையே போச்சு.. தோனியை மறைமுகமாக சாடிய மனோஜ் திவாரி

0
119

இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு பெற்று சூப்பர் ஸ்டார் வீரர்களாக உருவாகிய வீரர்கள் ஏராளம் என்றால் அதே நேரத்தில் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் போன வீரர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இந்திய முன்னாள் வீரரான மனோஜ்திவாரியும் ஒருவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தனக்கு நிராகரிக்கப்பட்ட வாய்ப்புகள் குறித்து சில முக்கிய கருத்துக்களை மனோஜ் திவாரி பேசியிருக்கிறார்.

- Advertisement -

சதம் அடித்து நிரூபித்த இந்திய வீரர்

திறமையான கிரிக்கெட் வீரர்களில் வாய்ப்பு கிடைக்காமல் மங்கிய திறமையான கிரிக்கெட் வீரர் என்றால் அது மனோஜ் திவாரியின் பெயரை குறிப்பிடலாம். அந்த அளவிற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் காலகட்டத்தில் தனது திறமையில் சற்றும் குறைவில்லாமல் ஒரு மிகச் சிறந்த வீரராக இருந்தார். தோனியின் தலைமையில் வாய்ப்பு பெற்று விளையாடும் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் சதம் அடித்த பிறகும் அவருக்கு அடுத்த போட்டியில் சில சூழ்நிலைகளால் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகு மங்கிய அவரது ஆட்டம் இந்திய அணியில் இருந்து அவரை முழுவதுமாக வெளியேற்றியது. இதுவரை 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி 287 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் 98 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை விளையாடி 1695 ரன்களும் குவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் பல ஆண்டுகள் கழித்து தனக்கு நிராகரிக்கப்பட்ட வாய்ப்பு குறித்து தனது எண்ணங்களை மனோஜ் திவாரி வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

நசுக்கப்பட்ட வாய்ப்பு

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இது நீண்ட காலத்திற்கு முன்பாக நடந்த விஷயம், இது ஒரு கடந்த கால விஷயம் ஆனாலும் இது வருத்தமாக இருக்கிறது. வருத்தமாக இல்லை என்று சொன்னால் அது முற்றிலும் பொய்யாக மாறும். இதற்கு நாம் என்ன செய்ய முடியும், ஆனால் இது வாழ்க்கை முன்னேறித்தான் ஆக வேண்டும். நான் இதை எனது சுயசரிதையாக எழுத முயற்சி செய்தால் என் எண்ணங்கள் அனைத்தையும் வெளிப்படுத்த முயல்வேன்.

இதையும் படிங்க: 3 வருடம்.. கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை.. வாஷிங்டன் சுந்தர் புனே மேஜிக்.. நியூசி அணியை முடித்து வைத்தார்

ஒரு வீரர் தனது உச்சத்தில் இருக்கும்போது அவரது நம்பிக்கை நசுக்கப்படும்போது அது ஒருவரது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறி இருக்கிறார். மனோஜ் திவாரி 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது சதம் அடித்து மிகச்சிறந்த ஃபார்மில் இருந்தார். ஆனால் அடுத்த போட்டியில் மகேந்திர சிங் தோனி அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இதைத்தான் தனது கருத்தில் தோனியை மறைமுகமாக சாடி பேசி இருக்கிறார்.

- Advertisement -