இந்திய கிரிக்கெட்

கோலி ரோஹித் இதை படிக்கல்கிட்ட கத்துக்கோங்க.. நீங்க செய்யாததை பையன் தரமா செய்யறாரு – மஞ்ரேக்கர் அதிரடி

​ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர் தேவதத் படிக்கல் காட்டி வரும் அபாரமான ஆட்டம் குறித்தும், இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறை பற்றியும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

- Advertisement -

​இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டீமின் இளம் பேட்ஸ்மேன் தேவதத் படிக்கல் தொடர்ந்து சிறப்பான பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தி வருகிறார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் இந்திய பிட்ச்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதன் மூலம் இவர் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

​நடப்பு டெஸ்ட் தொடரின் இரண்டு மேட்ச்களிலுமே ஃபர்ஸ்ட் இன்னிங்ஸில் செஞ்சுரி அடித்து அசத்தியுள்ள படிக்கல், ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி நம்பர் 3 பொசிஷனில் இந்திய அணிக்கு ஒரு பெரிய பலத்தை அளித்துள்ளார்.

​தேவதத் படிக்கல்லின் இந்த அபாரமான இன்னிங்ஸ் குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும்போது “கடந்த காலத்தில் இந்தியா எந்த மாதிரியான தவறுகளை செய்தது என்பதை படிக்கல் காட்டியுள்ளார். நமது பேட்ஸ்மேன்களும் பிக் ஸ்டார்கள் விராட் கோலி ரோஹித் சர்மா போன்றவர்கள் வெளிநாட்டு வீரர்களாக மாறிவிட்டார்கள் என்பதை நாம் உணரவில்லை. அவர்கள் வெளிநாடுகளிலேயே அதிகமாக விளையாடியதால், அவர்கள் வளர்ந்து சிறந்து விளங்கிய இந்திய பிட்ச்களில் விளையாடும் தொடர்பை இழந்துவிட்டார்கள். படிக்கல் அதன் உண்மையான மதிப்பை காட்டியுள்ளார்”

- Advertisement -

​”நமது ஸ்டார் பிளேயர்கள் அனைவரும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் வெளிநாடுகளில் மட்டுமே விளையாட வைத்ததன் மூலம் இந்தியா பெரிய தவறு செய்தது. இதனால் ஸ்டார் பிளேயர்கள் எவருக்கும் ஹோம் பிட்ச்களில் விளையாடும் பிராக்டீஸ் இல்லாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

​மேலும் பேசிய அவர் “இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைப் போல டிஃபென்ஸ் செய்யத் தெரியாமல் பலர் அட்டாக்கிங் முறையில் விளையாடுகிறார்கள், ஆனால் படிக்கல் ஃபிரண்ட் புட் மற்றும் பேக் புட் இரண்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். அவரது டிஃபென்ஸின் நீட்சி தான் அவரது அட்டாக்கிங் திறமையாகும். பெரிய ரன்களை அடிக்க வேண்டும் என்ற அவரது பசி டொமஸ்டிக் கிரிக்கெட்டின் மதிப்பை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது” என்றும் கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by