இன்று இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆறு விக்கெட் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்ற ஜெஃப்ரி வாண்டர்சே போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்கள் 240 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியிலும் 200 ரன்களுக்குள் இலங்கை அணி சுருளும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கை அணிக்கு பேட்டிங்கில் அவிஷ்கா பெர்னாடோ மற்றும் கவிந்து மெண்டிஸ் இருவரும் தலா 40 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 44 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா விக்கெட்டை ஜெஃப்ரி வாண்டர்சே கைப்பற்றினார். மேலும் அவர் தொடர்ந்து சுப்மன் கில், விராட் கோலி, சிவம் துபே, கேஎல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என இந்திய அணியின் பேட்டிங் வரிசையை முற்றிலும் காலி செய்தார்.
இதற்கு அடுத்து அக்சர் படேல் 44 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து போராடினார். இறுதியில் இந்திய அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக இலங்கையணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் ஜெஃப்ரி வாண்டர்சே பத்து ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் மட்டும் தந்து ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய ஜெஃப்ரி வாண்டர்சே “எங்கள் அணிக்கு நிறைய அழுத்தம் இருந்தது. நானும் நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பி இருந்தேன். எனவே நான் ஏதாவது செய்ய வேண்டி இருந்தது. இப்பொழுது இந்த வெற்றிக்கு என்னால் கிரெடிட் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் முதலில் பேட்ஸ்மேன்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடிய 240 ரன்கள் எடுத்தார்கள். அதுதான் நல்ல பகுதிகளில் பந்து வீச பாதுகாப்பை கொடுத்தது.
இதையும் படிங்க : நிஜமாவே இந்தியாவுக்கு இந்த ரன் போதும்னு நினைச்சேன்.. இப்ப எனக்கு ஒரு நல்ல பிரச்சனை வந்திருக்கு – அசலங்கா பேட்டி
நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஹசரங்கா வெளியேறி எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அணி உடைய சமநிலை பற்றி நான் புரிந்து கொண்டேன். நான் என்னை நானே உத்வேகப்படுத்திக் கொண்டேன். மேலும் ஆடுகளத்தில் சரியான இடங்களில் பந்தை அடிக்க முடிவு செய்தேன். நான் என்னுடைய முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா விக்கெட்டை பெற்றதும் நம்பிக்கை கிடைத்தது. நல்லவேளையாக என்னால் ஆறு விக்கெட் கைப்பற்ற முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.