எனக்கு அந்த விஷயம் ஏறுமுகத்துல இல்ல இறங்குமுகத்துல இருக்கு.. ஆனா நான் முயற்சி பண்றேன் – தோனி தந்த பதில்

0
4
Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தான் தொடர்ந்து விளையாடுவது உரித்தான ஒரு கேள்விக்கு மிகவும் நேர்மையான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை கொண்டு வந்திருப்பதின் மூலம், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு முழுமையாகவும் அவர் விளையாட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறை

ஐபிஎல் தொடரில் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணி இதுவரையில் எந்த நிகழ்ச்சிகளையும் பெரிதாக நடத்தியது கிடையாது. இந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே கிடைக்காத விளையாடிய சாம்பியன் வீரர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்வில் மேத்யூ ஹைடன், சுரேஷ் ரெய்னா, டேரன் பிராவோ சுப்ரமணியம் பத்ரிநாத் மற்றும் முரளி விஜய் என இன்னும் நிறைய வீரர்கள் வந்திருந்தார்கள். ஏஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

- Advertisement -

தோனி தந்த பதில்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் “உங்கள் ஓய்வு குறித்து கேட்கப்பட்டபோது டெபனன்ட்லி நாட் என முன்பு சொல்லி இருந்தீர்கள். இனி ஒவ்வொரு வருடமும் நீங்கள் அதையே சொல்ல வேண்டும். நீங்கள் 60 வயது வரையில் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : மும்பை கேப்டன் பதவியிலிருந்து ஹர்திக் விலகனும்.. இல்லனா இந்த பிரச்சனையாகிடும் – ஸ்ரீகாந்த் கருத்து

இதற்கு பதில் அளித்த மகேந்திர சிங் தோனி “இது மிகவும் கடினம். தற்போது என்னுடைய உடல் தகுதி என்பது ஏறுமுகத்தில் இல்லை; அது இறங்குமுகத்தில் உள்ளது. எனவே நான் முயற்சி செய்கிறேன். ஆனால் அதிக காலம் விளையாட முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -