இந்தியாவில் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஐபிஎல் டி20 திருவிழா வருகிற மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது. இதில் சிஎஸ்கே உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளன.
இந்த சூழ்நிலையில் இன்று சென்னை வந்து இறங்கிய சிஎஸ்கே அணியின் மகேந்திர சிங் தோனி டி-ஷர்டில் சூசகமாக தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டன் மகேந்திர சிங் தோனி, இதுவரை அந்த அணிக்காக கேப்டன் ஆக இருந்து 5 கோப்பைகளை வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், இந்த ஆண்டு அவரை சிஎஸ்கே நிர்வாகம் அவரை அன்கேப்டு பிளேயராக 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆண்டுக்கான முதல் போட்டி வருகிற மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில் மகேந்திர சிங் தோனி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது பயிற்சி துவங்க ஆரம்பித்தார்.
மேலும் அவர் பயிற்சி செய்யும் வீடியோ அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இன்று சிஎஸ்கே அகாடமியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தடைந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற டி-ஷர்ட் திடீரென்று மிகவும் வைரலானது. அவரது டி-ஷர்டில் கோடுகளாய் அமைந்த ஒரு புகைப்படம் இணையத்தை கலக்கியது.
அதன் அர்த்தம் என்ன என்று பார்த்தால், க்ரிப்டிக் மோர்ஸ் கோட் எனப்படும் கோடுகள் ஆங்கில வார்த்தைகளை குறிக்கிறது. தோனி அணிந்திருந்த டி ஷர்ட் கோடுகளை வைத்து பார்க்கும் போது அது ‘ஒன் லாஸ்ட் டைம்’ என்ற அர்த்தத்தை குறிக்கிறது. எனவே தோனி இந்த ஐபிஎல் தொடரில் மட்டுமே கடைசியாக விளையாடுவாரா? என்ற கேள்வகளும் தற்போது எழுகிறது.
இதையும் படிங்க:பும்ரா ஸ்டார்க் பிரட்லீ கூட இல்ல.. பாக் அணிக்கு எதிரா சிறந்த பவுலர் இந்த இந்திய வீரர்தான் – ஆகாஷ் சோப்ரா ஆச்சர்யம்
எப்போதுமே தனது ஓய்வு குறித்து அறிக்கையை எந்தவித பிரம்மாண்டமும் இல்லாமல், மறைமுகமாக அறிவிக்கும் டோனி இந்த முறையும் அதேபோல கடைப்பிடித்து இருக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் வயதின் காரணமாக தோனியும் இதுவே கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடலாம் என பல கிரிக்கெட் வல்லுனர்களும் கூறிவுகின்றனர். எனவே தொடர் முடிந்த பிறகு தோனி இது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.