நடப்பு டிஎன்பிஎல் தொடரின் 15ஆவது போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை மடக்கி அபார வெற்றி பெற்றது. கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்துவீச்சில் அசத்தினார்.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற கோவை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கோவை அணியின் கேப்டன் எடுத்த முடிவு சரி என்று கோவை அணியின் பந்துவீச்சாளர்கள் நிரூபித்தார்கள். திருச்சி அணி சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தது.
முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 9.3 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்து முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதற்கு அடுத்து சஞ்சய் யாதவ் 27 பந்தில் 34 ரன்கள், ஜாபர் ஜமால் ஆட்டம் இழக்காமல் 28 பந்தில் 41 ரன்கள் எடுக்க, திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
கோவை அணியின் பந்துவீச்சில் அந்த அணியின் கேப்டன் ஷாருக் கான் நான்கு ஓவர்கள் பந்துவீசி வெறும் 13 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த இரண்டு தொடர்களாக அவருடைய பந்து வீச்சு மிக சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எம்.முகமது 23 ரன்களுக்கு நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கோவை அணிக்கு இந்த முறையும் நான்கு ரன்கள் வெளியேறி சாய் சுதர்சன் ஏமாற்றம் தந்தார். மேலும் கோவை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார் இரண்டு பந்துகள் சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களால அழியல.. இவங்கதான் இப்படி எல்லாம் அழிக்கிறாங்க – நாசர் ஹுசைன் குற்றச்சாட்டு
இதற்கு அடுத்து துவக்க ஆட்டக்காரர் சுஜய் 39 பந்துகளில் 48 ரன்கள், முகிலேஷ் 54 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க, 16.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி கோவை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திருச்சி அணியின் தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.






