இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி தங்கள் சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணிக்கு இந்த முறை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் வர, பழைய கேப்டன் கேஎல்.ராகுல் இம்பேக்ட் பிளேயராக இருந்தார்.
லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 15 (9), தேவ்தத் படிக்கல் 9 (6), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 19 (12) என தொடர்ந்து வெளியேறினார்கள். இதற்குப் பிறகு குயின்டன் டி காக் 54 (38), கேப்டன் நிக்கோலஸ் பூரன் 42 (21) ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கு அடுத்து கடைசி கட்டத்தில் வந்த குர்னால் பாண்டியா 21 பந்தில் அதிரடியாக 42 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் தரப்பில் சாம் கரன் 4 ஓவர்களுக்கு 28 ரன்கள் தந்து 3 விக்கெட், அர்ஸ்தீப் சிங் 3 ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஜானி பேர்ஸ்டோ 42 (29) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 19 (17), ஜிதேஷ் சர்மா 6 (9), ஷிகர் தவான் 70 (49) சாம் கரன் என வரிசையாக வெளியேற பஞ்சாப் கிங்ஸ் வெற்றி கனவு முடிவுக்கு வந்தது.
இதில் ஷிகர் தவான், சாம் கரன் தவிர மற்ற மூன்று விக்கெட்டுகளையும் அறிமுகப் போட்டியில் விளையாடும் மயங்க் யாதவ் அதிவேக பந்துவீச்சில் வெளியேற்றினார். இவர் அதிகபட்சமாக மணிக்கு 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி ஆச்சரியப்படுத்தினார். நான்கு ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். பஞ்சாப் அணியின் பக்கம் இருந்த ஆட்டத்தை தனி ஆளாக லக்னோ அணியின் பக்கம் திருப்பினார்.
இதையும் படிங்க : நாளைக்கு சிஎஸ்கேவ விடமாட்டோம்.. ஓபனா சொல்றேன் இதுதான் எங்க பிளான் – டெல்லி கோச் ரிக்கி பாண்டிங் பேச்சு
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. களத்தில் லிவிங்ஸ்டன் 28 (17 ), சசாங்க் சிங் 9 (7) ரன்கள் எடுத்தார்கள். லக்னோ அணி இரண்டாவது போட்டியில் முதல் வெற்றியையும், பஞ்சாப் அணி மூன்றாவது போட்டியில் இரண்டாவது தோல்வியும் அடைந்தது.