இந்திய கிரிக்கெட்

அப்படி சொல்லாதீங்க.. அது பாகிஸ்தானை மட்டுமல்ல எங்களையும் அவமானப்படுத்துவது – ஜோ ரூட் வேண்டுகோள்

​இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு இங்கிலாந்து கேப்டன் பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

​தற்போது நடந்து வரும் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணி எளிதில் தோல்வியை தழுவியதால் அந்த அணி எந்தவித போராட்டத்தையும் அளிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

​ஆனால் பாகிஸ்தான் அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், அவர்கள் எந்த நேரத்திலும் திரும்ப அடிக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும் இங்கிலாந்து நிர்வாகம் கருதுகிறது.

​இது குறித்து இங்கிலாந்து கேப்டன் பேசும்போது “பாகிஸ்தான் போராடவே இல்லை என்று கூறுவது பாகிஸ்தான் அணிக்கும் எங்கள் அணிக்கும் செய்யும் டிஸ்ரெஸ்பெக்ட் ஆகும். நாங்கள் சிறப்பாக விளையாடி சூழ்நிலைகளை சரியாக ரீட் செய்ததால்தான் அவர்களை ஆட்டத்தில் டாமினேட் செய்ய முடிந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “ஒரு அணி எக்ஸலண்ட் என்றும் மற்றொரு அணி புவர் என்றும் கூறுவது மிகவும் ஈசியானது. ஆனால் கடைசி மேட்ச் என்பது எங்களுக்கு ஒரு டிஃப்ரண்ட் சேலஞ்ச் ஆக இருக்கும் என்பதால் நாங்கள் ரெடியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by