என்னை பற்றி இப்போ யோசிக்காம இருப்பதே நல்லது.. குழு விளையாட்டில் ஒருவரை தப்பு சொல்வது சரியல்ல – கேப்டன் ரிஷப் பண்ட்

0
210

தற்போது நடைபெற்ற முடிந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

லக்னோ அணி தோல்வி

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 32 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். அவருக்குப் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கிய நிலையில், மார்க்ரம் 9 ரன்னில் ஆட்டம் இழந்தாலும் அதற்கு பின்னர் களம் இறங்கிய பூரன் மார்ஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 21 பந்துகளில் 42 ரன்கள் குவித்தது. இதில் 15 பந்துகளை எதிர்கொண்ட பூரான் 27 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் இந்த முறையும் 4 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு லக்னோ அணியின் விக்கெட்டுகள் விரைவாக வெளியேற 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

- Advertisement -

சிந்திக்காமல் இருப்பது நல்லது

இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து ரிஷப் பண்ட் பேசும்போது “ஒரு அணியாக நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்தது சரியான முடிவு என்றுதான் நினைக்கிறோம். ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் எங்களது பேட்டிங்கை தான் ஆதரிக்க வேண்டியதாக இருக்கிறது. எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறந்த சூழ்நிலையை அவர்களுக்கு வழங்க விரும்புகிறோம். இன்று எங்களுடைய நாள் கிடையாது ஆனால் எதிர் அணி நன்றாக விளையாடியது. எனவே எங்களுக்கு இப்போது ஒரு நல்ல இடைவெளி உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும்.

இதையும் படிங்க:திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. 17 வருட ஐபிஎல்லில் வரலாறு படைத்த மும்பை அணி.. பும்ரா அபாரம்.. 54 ரன்னில் லக்னோ தோல்வி

எனது பேட்டிங் பார்ம் குறித்து அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பது நல்லது. இது போன்ற ஒரு சீசனில் விஷயங்கள் உங்கள் வழியில் நடக்காத போது ஒரு வீரராக உங்களை நீங்களே கேள்வி கேட்க தொடங்குவீர்கள். அது நீங்கள் செய்ய விரும்பும் ஒன்று அல்ல. அணி சிறப்பாக செயல்படும் போது நீங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது ஒரு குழு விளையாட்டு ஒவ்வொரு முறையும் ஒரு தனி நபரை வெளியேற்றினால் அது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். மேலும் காயத்தில் இருந்து மீண்டு வந்த மயாங்க் யாதவ் முதல் போட்டியிலேயே நல்ல வேகத்தில் சிறப்பாக விளையாடினார். எனவே அவர் சிறப்பாக செயல்படுவார் என்கிற நம்பிக்கை உள்ளது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -