எங்க பிளேயர்ஸ் கடுமையா உழைக்கிறாங்க.. ஆனா தோல்வியை தவிர்க்க இதை கவனிக்காம விட்டுட்டோம் – ரிஷப் பண்ட் பேட்டி

0
73

லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் 13வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் தோல்வி குறித்து அதன் கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

லக்னோ அணி தோல்வி

இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை ஓரளவு எதிர் கொண்டு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. லக்னோ அணியை பொருத்தவரை அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளை எதிர்கொண்டு 44 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆயுஷ் பதோணி 41 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணியை பொறுத்தவரை விக்கெட்களில் அர்ஸ்தீப் சிங் 3 விக்கட்டுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி லக்னோ அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 16.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்கள், தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அடுத்ததாக வதேரா 25 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம் குறித்து ரிஷப் பண்ட்

லக்னோ அணியின் தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறும்போது ” இந்த போட்டியை பொறுத்தவரை நாங்கள் எடுத்த ரன்கள் நிச்சயமாக போதாது. நாங்கள் இந்த ஆட்டத்தில் 20 முதல் 25 ரன்கள் வரை குறைவாக இருந்தோம். ஆனால் இது ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். நாங்கள் இன்னும் எங்கள் சொந்த மைதானத்தின் நிலைமையை மதிப்பிடுகிறோம். ஆரம்ப விக்கெட்டுகளை இழப்பது என்பது ஒரு பெரிய இலக்கை அடைவதற்கு எப்போதும் ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்கும்.

இதையும் படிங்க:16.2 ஓவரில் 177 ரன்.. இந்திய இளம் படையை இறக்கி வென்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. தவிடு பொடியான லக்னோ.. 8 விக்கெட்டில் பஞ்சாப் வெற்றி

ஆனால் எங்கள் அணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு வீரரும் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல கடினமாக உழைக்கிறார்கள். மெதுவான விக்கெட் எடுப்பது தான் யோசனை. இந்த ஆடுகளம் எங்களுக்கு மெதுவாக இருந்தது போல தோன்றியது. இந்த ஆடுகளத்தில் மெதுவான பந்துகள் போட்டியை மாற்றியதாக நினைக்கிறேன். எனவே இந்த போட்டியில் இருந்து நாம் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். இந்த ஆட்டத்தை பொருத்தவரை நிறைய நேர்மறையான விஷயங்கள் உள்ளன தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -